ரசிகைக்கு முத்தம் கொடுத்த 70 வயது பாடகர்.. வெளியான வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

By Nanthini on மாசி 1, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பாடி புகழ் பெற்ற பாடகர் தான் உதித் நாராயண். இவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் லதா மகேஷ்கர் விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் அச்சச்சோ புன்னகை, காதல் பிசாசே, சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா உள்ளிட்டா பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். 70 வயதாகும் இவர் இப்போது மேடையில் அசிங்கமாக நடந்து கொண்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது நேரலை நிகழ்ச்சியில் “டிப் டிப் பர்ஷா பானி” என்ற பாடலை பாடகர் உதித் நாராயண் பாடி கொண்டிருந்தார்.

Poore parivar ko khatam kar doonga: Udit Narayan opens up on death threats - India Today

   

அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்து போன அவருடைய தீவிர ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க மேடைக்கு அருகில் கூடினர். அப்போது பெண் ரசிகை ஒருவர் உதித் நாராயண் உடன் செல்ஃபி எடுத்துவிட்டு பாடகர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அப்போது பாடகர் அந்தப் பெண்ணின் தலையைப் பிடித்து திருப்பி உதட்டில் முத்தம் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் மற்றொரு பெண் ரசிகை பாடகரை முத்தமிட்டு கட்டி பிடிக்க முயன்ற போது அவரது கன்னத்திலும் உதித் நாராயண் முத்தமிட்டார்.

   

Book singer Udit Narayan for Live Shows at Best Prices

 

மேலும் செல்ஃபி எடுக்க வந்த மற்றொரு பெண்ணின் உதட்டிலும் முத்தம் கொடுத்தார். இவருடைய இந்த செயலை பார்த்து கூட்டத்தில் இருந்த பலரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இணையவாசிகள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். மறுபக்கம் பொது இடத்தில் கொடுத்த முத்தம் அருவருப்பானது தான் ஆனால் இதில் என்ன தவறு? அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி கொடுக்கவில்லையே என்று ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.