தங்கல் படத்தில் அமீர்கானின் மகளாக நடித்தவர் தான் பாலிவுட் நடிகை பாத்திமா ஷனா ஷேக். கமலஹாசன் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்திலேயே இவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக 2000 கோடி வசூலை ஈட்டிய திரைப்படம் தான் தங்கல். இந்த படத்தில் கீதா போகத் என்னும் ரியல் லைஃப் மல்யுத்த வீராங்கனின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் தான் பாத்திமா சனா ஷேக்.

இந்த படத்தில் செமையாக நடித்து அசத்தியிருப்பார். அடுத்ததாக அமீர்கான் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்திலும் பாத்திமா சனா சேக்கு ஹீரோயின் ரோல் வழங்கப்பட்ட நிலையில் தான் அமீர்கான் இவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் எல்லாம் கிளம்பியது. இப்படி தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வரும் நடிகை பாத்திமா சனா ஷேக் ஏன் தென்னிந்திய மொழி படங்களில் அதிகம் நடிப்பதில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் , “சில தென்னிந்திய தயாரிப்பாளர்கள் தன்னிடம் அத்துமீறி நடக்கும் முயற்சித்தார்கள். படத்திற்கு ஒப்பந்தம் செய்யும்போதே படுக்கைக்கு அழைக்கும் விதமாக பேசுகிறார்கள் .அதனாலயே பல படங்களை தவிர்த்து விட்டேன் “என்று கூறியுள்ளார். இப்படி தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக பேசிய அவர், குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள சினிமா பரபலங்கள் பிரபலங்களை குறிப்பிட்டு பேசியதுதான் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
SHOCKING: Dangal actress Fatima Sana Shaikh says many producers from Hyderabad asked her to sleep🛌 with them for a role in film. pic.twitter.com/PAnO4jSF9u
— Manobala Vijayabalan (@ManobalaV) January 31, 2025
