கடந்த 2015 ஆம் வருடம் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் 105 கோடி வரை வசூல் செய்தது. ஹாரிஸ் ஜெயராஜ் சையமைத்து வழங்கியிருந்தார். அப்பா-மகள் பாசப்பிணைப்பை அடிப்படையாக கொண்டு ஆக்ஷனுடன் உருவாகிய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

சிங்கிள் மதராக இருக்கும் திரிஷாவை அதே அன்போடு ஏற்றுக் கொள்வதும் அவர் இறந்த பிறகு அவருடைய மகளை தன்னுடைய மகளாக வளர்ப்பதும் சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இப்பொழுதும் படத்தில் உள்ள “மழை வரப்போகுது, அதாரு அதாரு பாடல்கள் காலர் டியூனராகவே இருக்கிறது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த படம் குறித்து கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, “நடிகை திரிஷா இந்த படத்தில் நடிக்க தயங்கினார். அது ஒரு கொரோனா காலகட்டம் லாக் டவுன் என்பதால் திரிஷாவிடம் போன் பண்ணி 5 நிமிஷ விண்ணை தாண்டி வருவாயா 2 மாதிரி ஒன்னு எழுதியிருக்கேன். ஒரு 20 நிமிஷம் தான் நடிக்கணும் என்று சொன்னதும், தயக்கத்தோடு அப்படியா என்று சொல்லிவிட்டு ஹீரோயின் கேரக்டர் கொடுங்க என்று சொன்னார். ஆனால் அனுஷ்கா கமிட்டாகி விட்டார் நான் எதுவும் பண்ண முடியாது என்று சொன்னதும் ஓகே நான் பண்ணுகிறேன் என்று சொன்னார்” என்று கூறியுள்ளார்.
