2016 ஆம் வருடம் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அப்பா. இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி, விக்னேஷ் போன்ற பலரும் நடித்திருந்தார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ஒருவர்தான் நடிகர் நாசத். இந்த படத்தில் மயில் வாகனம் என்ற ரோலில் நடித்திருந்தார்.

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது . அதனை தொடர்ந்து தொண்டன், கொளஞ்சி, பிழை போன்ற படங்களில் நடித்துள்ளார் இதற்கிடையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஈரோடு அருகில் கொக்கராயம் பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் , தனக்கு பட வாய்ப்புகள் வரும் பொழுது மட்டும் தான் சென்னை வருவார் என்று கூறியிருந்தார்.

அதன்பிறகு கடந்த எட்டு மாதங்களாக சொந்த ஊரில் செய்த பிசினஸை கொடுத்துவிட்டு இப்போது பாடவாய்ப்பு தேடி மீண்டும் சென்னைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார் . இந்த நிலையில் இவர் சமுத்திரகனியோடு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பா படத்தில் நடித்த அந்த சிறுவனா இது? இப்படி வளர்ந்துட்டாரே என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
