தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர்தான் இசையமைப்பாளர் சாம் சி எஸ். கேரள மாநிலம் மூணாறில் பிறந்த இவர் தேனியில் உள்ள கம்பத்தில் வசித்து வருகின்றார். பட்டப் படிப்பை முடித்த பிறகு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் திசை மீது கொண்ட ஆர்வத்தால் சாஃப்ட்வேர் வேலையை விட்டு விலகினார். ஓர் இரவு படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு விக்ரம் வேதா திரைப்படத்தில் இசை அமைத்ததன் மூலம் தனக்கான இடத்தை பிடித்தார். இந்த திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கேட்டரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களுக்கும் இசையமைத்து வருகின்றார். இறுதியாக புஷ்பா 2 படத்திற்கு இவர் பின்னணி இசை அமைத்திருந்தார். தற்போது தொடர்ந்து பல சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இளையராஜா சார் பாட்டுன்னு நினைச்சுகிட்டு நான் பல பாட்டை கேட்டு இருக்கேன். கண்ணுக்குள் நூறு நிலவு என்ற பாட்டை கேட்டு நான் இளையராஜா பாட்டு ஒன்று நினைத்திருக்க அதுக்கு அப்புறம் தான் அது அவர் பாட்டு இல்லன்னு சொன்னாங்க.

அதே மாதிரி டி ஆர் ராஜேந்திரன் பாடிய நிறைய பாட்ட நான் இளையராஜா பாட்டுன்னு நினைச்சு இருக்கேன். ஏனென்றால் அந்தப் பாட்டை அந்த அளவுக்கு நான் ரசிச்சு கேட்டேன். ஆனா இப்ப இருக்கவங்க பாட்டை ரசிக்கவே மாட்றாங்க. பெரிய பெரிய இசை அமைப்பாளர்கள் பாடல்களை மட்டுமே ரசிக்கிறார்கள். சாதாரண ஒருத்தருடைய பாட்டை ப்ரோமோஷன் செய்வதற்கு நிறைய காசு மட்டும் அல்லாமல் பெரிய ஹீரோ என பல விஷயம் தேவைப்படுது. இங்க எல்லாமே பணம்தான். இது ஒரு பிசினஸ் மாதிரி. நல்ல பாட்டா இல்லையான்னு யாரும் கேட்க மாட்டாங்க. ஒரு பாட்டை போட்டுட்டா மட்டும் போதாது அதை ப்ரோமோஷன் பண்ற வேலை நிறைய இருக்கு.
![]()
ஆனா இதுவரைக்கும் என்னுடைய ஒரு பாட்டுக்கு கூட நான் காசு கொடுத்து பிரமோஷன் பண்ணது கிடையாது. ஏனென்றால் என்னுடைய பாட்டு பத்து பேருக்கு பிடிச்சிருக்கு என்றால் எனக்காக பத்து பேர் இருக்காங்க என்பது எனக்கு சந்தோசம். அதுவே நான் காசு கொடுத்து 15 பேர் அந்த பாட்டை ரசிக்கிறாங்க எனக்காக வராங்க என்றால் அது எனக்காக கிடையாது பணத்துக்காக தான். இதுவே நான் ஒரு அஜித் அல்லது விஜய் படத்துக்கு கம்போஸ் பண்றேன் என்றால் எனக்காக அதை பார்க்க மாட்டாங்க அவங்க அவங்க ரசிகர்கள் அவர்களுக்காக பாப்பாங்க. என்னோட பாடல்கள் நிறைய ஹிட் பாடல்கள் இருக்கு. அதில் அனிருத் பாடுன பாட்டு நிறைய மக்கள் மத்தியில் ரீச் ஆயிருக்கும். அதுவே நான் எழுதின பாட்ட இன்னொரு பாடகர் பாடியிருந்தால் நல்லா இருந்தா கூட அது views கம்மியா தான் போயிருக்கும். சினிமாவை பொறுத்த வரைக்கும் அவங்க அவங்களுக்கு யார் அதிகமா பிடிச்சுருக்கோ அவங்க பாட்டை தான் கேப்பாங்க என்று சாம் சி.எஸ் பேசியுள்ளார்
