ஒவ்வொரு வீட்டிலும் Fridge என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. ஏழைகளின் வீட்டிலும் கூட ஃபிரிட்ஜ் இருக்கிறது. ஆனால் சமீபத்திய காலங்களில் Fridge வெடிப்பது விபத்துக்குள்ளாவது போன்ற செய்திகளை கேட்டிருப்போம். இந்த அசம்பாவித சம்பவம் எல்லா இடங்களிலும் நடைபெறாது என்றாலும் கூட பிரிட்ஜை பயன்படுத்தும் போது ஒரு சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அதைப்பற்றி இனி காண்போம்.

உங்கள் வீட்டில் நீங்கள் பிரிட்ஜை பயன்படுத்தும் போது மாதத்திற்கு ஒருமுறையாவது ஃப்ரிட்ஜை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதிகமான பொருட்களை போட்டு குவித்து வைக்க கூடாது. தேவையான பொருட்களை மட்டுமே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
நீங்கள் காய்கறி பழங்கள் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வாங்கி வைக்கும் போது எது கெட்டுப் போகிற நிலைமையில் இருக்கிறதோ அதை முதலில் எடுத்து பயன்படுத்தி விடுங்கள். அழுகிய பொருட்களை நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். உங்களது பிரிட்ஜில் மின்சாதனங்கள் ஷார்ட் சர்க்யூட் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் தீ விபத்து தவிர்க்கப்படும்.
பிரிட்ஜில் இருந்து வரும் அனைத்து ஒயர்களையும் அவ்வப்போது உன்னிப்பாக சரி பார்க்கவும். இதில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மாற்றம் செய்யலாம். ஒரு சில வீட்டில் எலி தொல்லை இருக்கும். அவை இந்த ஒயர்களை கடித்து வைத்து விடும். அதனால் இதை அவ்வப்போது கவனித்து கொள்வது மிகவும் நல்லது.

உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜை சுவரை ஒட்டி வைக்காதீர்கள். சற்று இடைவெளி விட்டு வையுங்கள். காற்று வசதியாக செல்லும் இடத்தில் பிரிட்ஜை வையுங்கள். வீட்டில் அடிக்கடி கரண்ட் ஆனது உயர் அழுத்தம் ஏற்படலாம். அதனால் எப்போதும் உங்கள் பிரிட்ஜ்க்கு ஒரு ஸ்டெபிலைசர் வைத்து பயன்படுத்துங்கள். பிரிட்ஜ் தானே என்ன செய்து விடும் என்று பொறுப்பில்லாமல் இருக்காமல் எந்த ஒரு காரியத்தையும் முன்னெச்சரிக்கையாக இருந்து கொண்டால் எந்த ஒரு விபத்தையும் தடுக்க முடியும்.
