தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் திரிஷா. விஜய் திரிஷா ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டாக தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து இணைத்து நடித்தனர். அதன்பின் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. விஜய் த்ரிஷா ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். கடைசியாக திரிஷா GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்து மட்ட பாடலுக்கு அருமையான குத்தாட்டம் போட்டிருப்பார். இந்நிலையில் இவர் தற்போது தன் கைவசம் வைத்திருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட படத்தின் டிரைலர் வெளியான வெளியாகி வரவேற்பை பெற்று விட்டது.

அடுத்ததாக அஜித்துடன் த்ரிஷா நடித்துள்ள மற்றொரு படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படமும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது,.

தக்லைப் திரைப்படம் இந்தியா முழுவதும் மீண்டும் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு கமல் மணிரத்தினம் கூட்டணி ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்த படம் 2020ஆம் வருடம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் திரிஷா.

த்ரிஷா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த மௌனம் பேசியதே மற்றும் ஆறு ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் அடித்ததால் சூர்யா45 படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது

அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் படத்தில் அம்மனாக நடிக்க உள்ளார் த்ரிஷா.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படமும் திரிஷா கைவசம் உள்ளது.
