அலைபாயுதே படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்கள்தானா?.. அட செம்மையா இருந்திருக்குமே… நடக்காமல் போனதன் காரணம் இதுதான்!

By vinoth on தை 28, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மூத்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றோ அல்லது அவுட்டேட் ஆகியோ வெளியேறிவிடும் நிலையில் மணிரத்னம் தன்னுடைய 70 ஆவது வயதிலும் பிஸியான இயக்குனராக வலம் வருகிறார்.

மணிரத்னம் முதலில் இயக்கிய தமிழ் படம் இதயக் கோவில். அதன் பிறகு பகல் நிலவு படத்தை இய்க்கினார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமாக அமையாததால் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் தனது முதல் ஹிட்டை மௌனராகம் திரைப்படத்தின் மூலமாகதான் கொடுத்தார்.

   

அதன் பின்னர் அவருக்கு என்று பிராண்ட் வேல்யூ உருவானது. நாயகன், தளபதி என அடுத்தடுத்து அவரின் கிராஃப் எகிறிக் கொண்டே சென்றது. ரோஜா மற்றும் பம்பாய் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். அதனால் இந்தி சினிமாவிலும் அவருக்கு நல்ல பெயர் உருவானது. இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தனர்.

   

 

அப்படிதான் ஷாருக் கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் அவர் முதன் முதலில் ‘தில்சே’ என்ற நேரடி இந்திப் படத்தை இயக்கினார். அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் அதிரி புதிரி ஹிட் அடித்தன. ஆனால் படம் பெரிய அளவுக்கு ஹிட்டாகவில்லை.

இந்நிலையில் ஷாருக் கானுக்காக அவர் எழுதிய கதை தில்சே இல்லை என்று மணிரத்னம் கூறியுள்ளார். இது பற்றி ஒரு நேர்காணலில் பேசிய அவர் “அலைபாயுதே படத்தை முதலில் ஷாருக் கான் மற்றும் கஜோல் ஆகியோரை வைத்து எடுக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அப்போது என்னிடம் முழுக் கதையும் இல்லாததால் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட தில்சே (தமிழில் உயிரே) படத்தை எடுத்தோம்.’” எனக் கூறியுள்ளார். தில்சே வெளியான பிறகு அடுத்த ஆண்டே மாதவன், ஷாலினி நடிப்பில் ‘அலைபாயுதே’ படத்தை தமிழில் எடுத்தார் மணிரத்னம்.