தொடக்கத்தில் 12 படங்களின் தோல்வியையும் தாண்டி… இந்திய சினிமாவில் அமிதாப் பச்சன் ஜாம்பவனாக ஜொலித்தது எப்படி..?

By Soundarya on தை 27, 2025

Spread the love

பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாபச்சன். 60 ஆண்டுகளாக திரையுலகில் கொடி கட்டி பறந்த அமிதாப் பச்சன் தற்பொழுதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். திரைப்படங்களில் நடித்த வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து கொண்டும் வருகிறார் . அவர் ஆரம்ப கட்டத்தில் ஒரு ராசியில்லாத ராஜா என்று தான் முத்திரை குத்தியிருந்தார்கள். தனது முதல் 14 படங்களில் பன்னிரண்டு படங்கள் தோல்வியை சந்தித்தன.

அமிதாப் பச்சன் சந்தித்த ஐந்து பெருந்தடைகள் - உயர்ந்த மனிதனின் உத்வேகக் கதை!

   

படத்தின் கதையை எழுதியவர் நடிகர் சல்மான் கானின் தந்தை.  உண்மையில் இவர்கள் எழுதிய கதையில் ஒரு கேரக்டருக்கு  மட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. அதில் கோபக்கார இளைஞன் கேரக்டர். அப்போது ஹிந்தி நடிகர்கள் சாக்லேட் பாய் ஆகவும் வளர்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் அந்த கேரக்டரில் நடிக்க தயங்கி நிலையில் அமிதாப்பச்சன் அந்த கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த திரைப்படம் அதுவரை இருந்த பாலிவுட் அனைத்து கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது.

   

 

ஹாலிவுட் திரை அரங்கமே அமிதாப்பச்சனை திரும்பிப் பார்த்து கொண்டாட ஆரம்பித்தது.இந்த படத்தின்  திரைக்கதை ஆசிரியர்களான சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர். இந்த படத்தில் இந்த பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு விஜய் என்றுதான் அவர்கள் பெயர் வைத்தார்கள். இப்படி அவர்கள் உருவாக்கிய திரைக்கதைகள் அமிதாப் பச்சனை சூப்பர் ஸ்டாராக ஆக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களையும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களாக்கியது.

எப்படி என்றால் ஒரு கட்டத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக இருந்த அமிதாப் பச்சன், ஒரு படத்துக்கு 20 லட்சம் சம்பளம் வாங்கினார் என்றால் தங்களுக்கு 21 லட்சம் ரூபாய் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் டிமாண்ட் செய்யும் அளவுக்கு அவர்களின் மார்க்கெட் இருந்துள்ளது. கேட்டது மட்டும் இல்லாமல் அப்படி பெறவும் செய்துள்ளார்கள்.