ரஜினியை வைத்து படம் இயக்க முடியுமா என கேட்ட லைகா உரிமையாளர்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பிரபல நடிகர்..!

By Nanthini on தை 27, 2025

Spread the love

நடிகர் பிரித்விராஜ் தயாரிப்பு மற்றும் நடிப்பு என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்தி வரும் நிலையில் இயக்குனராகவும் அவர் சிறப்பான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகின்றார். அதன்படி மோகன்லால் வைத்து அவர் முன்னதாக கொடுத்திருந்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாவது பாகமாக தற்போது எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கி முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பான் இந்தியா படமாக இயக்குனர் உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

எம்புரான் படப்பிடிப்பில் உதவி இயக்குனருக்கு பிரித்விராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி

   

வருகின்ற மார்ச் 27ஆம் தேதி இந்த திரைப்படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. லூசிபர் திரைப்படத்தில் மோகன்லாலின் உதவியாளர் சையத்தாக பிரித்விராஜ் நடித்திருந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள எம்புரான் படத்திலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதை டீசர் மூலம் பார்க்க முடிகிறது. நேற்று நடந்த டீசர் ரிலீஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் மம்முட்டி, மஞ்சு வாரியர் மற்றும் டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.

   

Empuraan'? Prithvi will tell what 'Lucifer 2' title means | Manorama English

 

அப்போது மேடையில் பேசிய பிரித்விராஜ், ஒரு நாள் எதார்த்தமாக அடுத்து என்ன செய்ய போறீங்க என்று லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் சார் என்கிட்ட கேட்டாரு. லூசிபரின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கப் போறேன் என்று கூறினேன். அப்போது என்னிடம் உங்களின் கனவு படத்தில் நான் எப்படி ஒரு அங்கமாக இருப்பது என்று கேட்டார். அதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படிதான் இந்த படத்தில் லைவா நிறுவனம் ஒரு அங்கமாக மாறியது.

கனா கண்டேன் முதல் சலார் வரை..பிரித்விராஜின் வில்லன் நடிப்பை பார்த்து பிரமித்து பாராட்டிய ரஜினிகாந்த் | A special story of Malayalam actor Prithviraj for his 40th ...

மலையாளத்தில் லைகாவின் முதல் படம் இது என்பது கூடுதல் சிறப்பு. சுபாஷ்கரன் தன்னிடம் எங்கள் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு அதை மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால் பகுதி நேர இயக்குனரான என்னால் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினி சாருக்கு கதை தயார் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். அதே நேரத்தில் சுபாஸ்கரன் சாருடனான நட்பு வளர்ந்துள்ளது என்று பிரித்விராஜ் பேசியுள்ளார்.