தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் அதற்கான படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கவில்லை.

நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் பேட்டைக்காரன் படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது மற்றொரு மாஸ் படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். கே ஜி எஃப் திரைப்படத்தை மையமாக வைத்து வெற்றிமாறன் அந்த படத்தை எடுக்க உள்ளாராம். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் விடுதலை படத்தை தயாரித்த எல் ரெட் குமார் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகள் உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன் மனைவி ஆர்த்தி தனது கணவர் பற்றி பேசியுள்ளார். அதில், நான் பெரும்பாலான இடங்களுக்குச் செல்லும் போது நானும் என்னுடைய குழந்தைகள் மட்டும்தான் செல்வோம். அப்போ உங்க வீட்டுக்காரர் ரொம்ப பிசியா இருப்பாரு என்று எல்லோரும் கேட்பார்கள். நானும் ஆமாம் என்று சொல்லிட்டு வந்துருவேன்.

ஆனா உண்மையிலேயே அவரை விட நான் தான் ரொம்ப பிசி. அவர் பொதுவாவே மூணு வருஷத்துக்கு ஒரு படம் தான் எடுப்பாரு. வீட்ல ரொம்ப ரிலாக்ஸா இருப்பாரு. அப்படி இருக்கிறதுனால தான் அவருக்கு படைப்பாற்றல் திறன் அதிகமாக இருக்கு. அதனாலதான் படம் பண்ண முடியுது. நானே அவர்கிட்ட நிறைய டைம் சொல்லி இருக்கேன் இந்த வீட்ல உங்கள விட நான் தான் நிறைய வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன் என்று தனது கணவர் வெற்றிமாறன் குறித்து ஆர்த்தி பேசியுள்ளார்.
