கும்பமேளாவில் திடீரென சன்னியாசியாக மாறிய பிரபல நடிகை.. திடீர் மாற்றத்தால் அதிர்ச்சிடைந்த ரசிகர்கள்..!

By Nanthini on தை 25, 2025

Spread the love

தளபதி விஜயின் அம்மா இயக்குனர் சோபா சந்திரசேகர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான நண்பர்கள் திரைப்படத்தில் நடித்தவர்தான் மம்தா குல்கர்னி. இந்த படத்தை விஜய் தான் தயாரித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு மம்தா குல்கர்னி தமிழில் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2003 ஆம் ஆண்டு வெளியான Shesh Bongsodhar என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ACTRESS MAMTA KULKARNI BECOMES SADHVI | 25 January, 2025 – Film Information

   

90களில் மிகவும் பிரபலமான நடிகையான இவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு அசாதாரண முடிவை எடுத்துள்ளார். அதாவது கின்னர் அகாடாவின் மகா மண்டலேஸ்வர் பட்டத்தை ஏற்றுக்கொண்ட இவர் தன்னுடைய பெயரை மம்தா குல்கர்னியிலிருந்து மம்தா நந்த கிரி என மாற்றிக் கொண்டார். கழுத்தில் ருத்ராட்சம் மற்றும் காவி உடை அணிந்த இவர் புதிய ஆன்மீக பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார். இந்த திடீர் முடிவுக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், இது அனைத்தும் மகா காலன் மற்றும் ஆதி சக்தியின் விருப்பம். நேற்றுதான் எனக்கு மகா மண்டலேஸ்வராகும் வாய்ப்பு கிடைத்தது.

   

கும்பமேளாவில் முழு துறவறத்துக்கு மாறிய நடிகை மம்தா குல்கர்னி: விரைவில் மகா  மண்டலேஷ்வர் பதவி | Actor Mamta Kulkarni to become Mahamandleshwar of Kinnar  Akhara at Mahakumbh ...

 

கின்னர் அகாடாவில் எந்த கட்டுப்பாடு இல்லை. இங்கு சுதந்திரமாக மத சடங்குகளை செய்யலாம் என்று தெரிந்ததும் இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 23 ஆண்டுகள் தவம் செய்த பிறகு மகா மண்டலகேசுவரர் பட்டம் எனக்கு கிடைத்துள்ளது. இதை எனது சாதனையாக கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த திடீர் முடிவு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.