பிரபல இயக்குனரான செல்வராகவன் கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார். பின்னர் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களையும் செல்வராகவும் இயக்கியுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.

ராயன் படத்திற்கு பிறகு அவருக்கு அடுத்த மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டாராம் செல்வராகவன். அதற்கு காரணம் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களை இயக்க செல்வராகவன் ஆர்வத்தோடு கதையை தயார் செய்கிறாராம். இப்படியான நிலையில் இணையத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நம் வாழ்க்கையில் வழுக்கி விழுந்தாலோ, தவிர்க்க முடியாத சோகம் வந்தாலும் நம் உதவிக்கு யாரும் வர மாட்டாங்க. நான் தான் அப்படின்னு சொல்லிட்டு ஓடி வந்து நண்பர்கள் யாராவது அட்வைஸ் கூறுவார்கள். ஆயிரம் பேர் வருவாங்க ஆனா அறிவுரை சொல்றதுக்கு மட்டும். ஆனா அதையெல்லாம் கேட்டு கேட்டு எத்தனையோ பொண்ணுங்க நல்ல புருஷனையும் எத்தனையோ ஆண்கள் நல்ல பொண்டாட்டியை விட்டு பிரிஞ்சு வாழ்ந்துட்டு இருக்காங்க.

இது ஒரு புதைகுழி மாதிரி அவங்க சொல்றத கொஞ்சம் கொஞ்சமா கேட்டு அப்புறம் நீங்க காணாம போயிருவீங்க. அதனால் என்ன நடந்தாலும் நாமே ஊர்ந்து ஊர்ந்து சென்று கஷ்டப்பட்டு கிடைக்கிற ஏதாவது பிடித்து கொஞ்சம் கொஞ்சமா மேல வந்து தட்டு தடுமாறி நாம தான் ஓடணும். இதுதான் ஒரே வழி. இதை தான் கடவுளும் சொல்கிறார் என்று செல்வராகவன் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
View this post on Instagram
