“உங்களுக்காக நான் பண்ணேன்ல, எனக்காக இதை பண்ணுங்க”.. சந்தானம் கேட்டதற்காக கௌதம் மேனன் செய்த விஷயம்..!

By Nanthini on தை 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார்.

இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா.. ஸ்டைலிஷ் இயக்குநர் கெளதம் மேனன்.. டிரெண்டாகும் #HappyBirthdayGVM! | Director Gautham Vasudev Menon Birthday! - Tamil Filmibeat

   

இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இப்படி பிசியாக இருந்தால் கௌதம் மேனன் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் இயக்கத்தில் இருந்து ஒதுங்கினார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் சிம்புவை வைத்து இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கௌதம் மேனன் மீண்டும் தற்போது மம்மூட்டியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

   

டெவில்ஸ் டபுள்….. சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 

இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், சந்தானத்தின்  ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சில நிமிட காட்சிகள் மட்டுமே எனக்கு இருந்தது. ஆனால் அதனை உங்க படங்களில் பண்றது போல ரசிச்சு பண்ணுங்க என்று என்கிட்ட கேட்டாங்க. சந்தானம் என்கிட்ட பேசும்போது, அன்னைக்கு நீங்க கேட்கும் போது என்கிட்ட டேட் இல்லை நீதானே என் பொன்வசந்தம் பண்ணி கொடுத்தேன். எனக்காக இதை பண்ணி கொடுங்க என்று சந்தானம் கேட்டதும் அவருக்காக அந்த படத்தை நான் பண்ணி கொடுத்தேன்.

இயக்குனர் கவுதம் மேனனின் மனைவியை பார்த்துள்ளீர்களா..

படத்துல ரொம்ப சீரியஸா போயிட்டு இருக்குற என்னோட கேரக்டரை சுத்தி நிறைய காமெடி நடந்துக்கொண்டே இருந்துச்சு. ஹாரர் கலந்த படம் என்பதால் முடிந்த அளவுக்கு நானும் பண்ணி கொடுத்தேன். இந்த படத்துல நான் சீரியஸ் கேரக்டரா இருந்தாலும் ஏன் கேரக்டரை சுற்றி காமெடி நடந்துச்சு. என்னோட படங்களுக்கு ஸ்பூஃப் பண்ணவும் அவங்க அனுமதி கேட்டாங்க. நானும் அதில் கலந்து கொண்டேன் என்று சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்த அனுபவம் குறித்து கௌதம் மேனன் பேசியுள்ளார்.