அப்ப 300 கோடின்னு சொன்னதெல்லாம் உருட்டா?… வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ‘வாரிசு’ உண்மையான வசூலை சொன்ன தில் ராஜு!

By vinoth on தை 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

   

   

கடந்த சில ஆண்டுகளாக விஜய் தனது சினிமா கேரியரின் உச்சத்தில் இருக்கிறார் என்றும் அவரின் தோல்விப் படங்கள் மிகச்சிறப்பாக கலெக்‌ஷன் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்படி அவர் நடிப்பில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற வாரிசு படமே 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக அப்போது புள்ளி விவரங்கள் வெளியாகின. ஆனால் இவையாவும் ஊதிப் பெருக்கப்பட்டவை என அப்போதே விமர்சனங்களும் எழுந்தன.

 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் “வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாரிசு படத்தின் வசூல் 120 கோடி ரூபாய்தான் என்றும் விஜய்யின் சம்பளம் 40 கோடி ரூபாய்தான்” என்றும் தில் ராஜு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படம் ரிலீஸான போது 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எது உண்மை என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.