தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவரது இயற்பெயர் அணு ராதிகா என்பதாகும். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த த்ரிஷா தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் மேடை நாடகங்களில் கலந்து கொள்வார். அதுமட்டும் இல்லாமல் மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1999 ஆம் ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருப்பார் த்ரிஷா. அதற்கடுத்ததாக 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உனக்கும் எனக்கும், கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் த்ரிஷா.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமே நடித்து வருபவர் த்ரிஷா. தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, GoodBadUgly ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்தடுத்து படங்களுக்கு த்ரிஷாவுக்கு வாய்ப்பு தேடி வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தற்போது சினிமாவிலிருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் ஒருவேளை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக போகிறாரா இல்லை என்றால் விஜயுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது போல் அரசியலில் இறங்கப் போகிறாரா அதனால் தான் சினிமாவில் மார்க்கெட் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு நினைக்கிறாரா என்று பலவிதமாக சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
