சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் ராவியின் ஓனர் வீட்டிற்கு வந்து அனைவரும் பொங்கல் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூப்பிடுகிறார். எல்லோரும் போய் கலந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து கிளம்பி கொண்டிருக்கிறார்கள். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் பொங்கல் போட்டியில் ஒவ்வொருவராக கலந்து கொள்கிறார்கள். முதலில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் மீனா ஜெயித்து விடுகிறார். அடுத்ததாக ஆண்கள் போட்டிகள் நடக்கிறது. இவ்வாறாக பொங்கல் போட்டி நடந்து முடிகிறது. அதற்கு அடுத்ததாக வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு தொட்டிலை வீட்டில் கொண்டு வந்து வைக்கிறார் பாட்டி. இதில் யார் முதலில் குழந்தையை பெற்று போடறாங்கனு நான் பாக்கணும் என்று கூறுகிறார்.

உடனே அந்த நேரத்தில் சுருதி பாட்டி நான் வந்து நானா குழந்தை பெத்துக்க போறதில்ல வாடகை தாய் மூலமாக தான் குழந்தை பெத்துக்கணும்னு இருக்கேன் இந்த பிரசவ வலி எல்லாம் என்னால தாங்கவே முடியாது என்று கூறுகிறார். இந்த வார்த்தையை கூறியதும் அனைவரும் அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர். உடனே விஜயா கோபப்பட்டு சுருதி என்ன இப்படி பண்ணிட்டு இருக்க இதை எங்கேயாவது ஊர் உலகத்துல நடக்குமா? இதெல்லாம் எல்லாரும் கடந்து வர விஷயம் தானே என்று கத்துகிறார். பாட்டியும் எவ்வளவோ சொல்லி புரிய வைக்க பார்க்கிறார். அண்ணாமலையும் சுருதி அதெல்லாம் குழந்தை பெத்துக்க வாய்ப்பு இல்லாதவங்க தான் அந்த மாதிரி பண்ணுவாங்க நல்ல ஆரோக்கியமா இருக்க குழந்தை பெத்துக்கிறதுல என்ன தப்பு என்று கேட்கிறார். உடனே என்னால முடியவே முடியாது என்னால ஒரு ஊசி போடுற வலி கூட தாங்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
ரவியும் எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்ல தான் நான் எப்படியாவது அவளை மாத்த ட்ரை பண்றேன் என்று கூறுகிறார். பாட்டியோ நீ அவளை இப்பவே டென்ஷன் பண்ணாத கொஞ்சம் கொஞ்சமா புரியவை என்று கூறுகிறார். அதற்கு அடுத்ததாக மீனா கல்யாண வீட்டில் பூ டெக்கரேஷன் பண்ணுவதற்கு செல்கிறார். அப்போது அவரது டெக்கரேஷனை கெடுக்க வேண்டும் என்று எதிராக இருக்கும் பெண்மணி திட்டம் தீட்டி இருவரை அனுப்பி அவங்க பண்ண டெக்கரேஷன் எல்லாத்தையும் கீழ இழுத்து போட்டுருங்க என்று கூறுகிறார். ஆனால் நினைத்தது வேறு நடந்தது வேறு என்பது போல் அந்த இருவரையும் மீனா மற்றும் அவருடன் தோழிகள் அடித்து துவைத்து அனுப்பி விடுகிறார்கள்.

உடனே மீனா அந்த பெண்மணி இடம் சென்று எதுக்கு இப்படி என் வேலையை கெடுக்க பாக்குறீங்க ஒன்னு தான் வாழு வாழ விடு அவ்வளவுதான் என்னைக்குமே அடுத்தவங்களை கீழே இறக்கிட்டு நீங்க வாழனும்னு நினைக்காதீங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதற்கு அடுத்ததாக பணத்தை ஏமாற்றி சென்றவனை கண்டுபிடிக்க சிசிடிவி புட்டேஜ் வாங்க வேண்டும் என்று போலிஸ் உடன் ரோகிணியும் மனோஜம் கோவிலுக்கு வருகிறார்கள். இதை மீனாவின் அம்மாவும் தங்கையும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது சிசிடிவி ஃபுட்டேஜ் போலீஸ் கோவில் நிர்வாகிகளிடம் வாங்கி விடுகிறார்கள். உடனே மனோஜ் எனக்கு ஒரு காபி கொடுங்க சார் என்று கேட்கும்போது போலீஸ் நன்றாக மனோஜை திட்டி விடுகிறார். உடனே இல்ல சார் பணம் கிடைக்கணும் அவசரத்துல அவர் இப்படி பேசிட்டாரு என்று ரோகினி சமாளிச்சு அனுப்புகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
