ஸ்கூல் படிக்கும் போது வாத்தியாரை பழிவாங்க நண்பர்களுடன் சேர்ந்து சந்தானம் போட்ட பிளான்.. அவரே பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..!

By Nanthini on தை 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சந்தானம். தற்போது இவர் வளரும் ஹீரோவாக இருக்கிறார். அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் ஒன்றுதான் லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறலாம். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகக்கூடிய படங்கள் அனைத்தையும் காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அந்த நிகழ்ச்சியில் நடித்த நடிகர்கள் தான் இன்றைய சினிமாவில் பல முக்கிய அந்தஸ்தை பெற்ற நடிகர்களாக உள்ளனர். அவர்களில் சந்தானம், யோகி பாபு மற்றும் சுவாமிநாதன் ஆகிய நடிகர்களும் அடங்குவார்கள்.  தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம்.

கோடியில் புரளும் நடிகர் சந்தானம் - சொத்து மதிப்பும், சம்பளமும் எவ்வளவு  தெரியுமா? - லங்காசிறி நியூஸ்

   

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா நடிகராக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான மதகஜராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி சந்தானத்தின் காமெடியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இப்படியான நிலையில் சந்தானம் தனது பள்ளி பருவம் குறித்து அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் ஸ்கூல் படிக்கும்போது காமெடியன் அல்லது ஹீரோ என்று சொல்ல முடியாது நான் ஒரு வில்லத்தனமான ஆள் தான்.

   

Comedy Actor Santhanam With His Wife Usha Photos Goes Viral On Social Media  Check Pics Here | Santhanam சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா வைரல்  புகைப்படம் News in Tamil

 

என்னுடைய பள்ளியில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் யார் என்ன தவறு செய்தாலும் கண்டிப்பாக நடந்து கொள்வது மட்டுமல்லாமல் அடித்து விடுவார். அப்படித்தான் ஒரு நாள் பள்ளியில் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு நாள் டூர் கூட்டிட்டு போனாங்க. அப்போ அந்த வாத்தியாரும் எங்க கூட வந்திருந்தார். கூடவே லேடி டீச்சர் நிறைய பேர் இருந்தாங்க. பஸ்ல எல்லாரும் உக்காந்துட்டு இருக்கும்போது சாணி வாசம் வந்துச்சு. அத கவனிச்ச அந்த வாத்தியாரே எழுந்து நின்று யாருடா காலுல சாணி மிதிச்சிட்டு வந்தது என்று கேட்டார். ஒவ்வொருவரையும் செக் பண்ணி கொண்டு இருக்கும் போது நான் சும்மா இருக்காமல் பக்கத்துல இருந்தா என்னோட நண்பன் ஒருத்தன் சரியான ஓட்ட வாயி எது சொன்னாலும் அப்படியே கேட்டு விடுவான். அவன்கிட்ட சார் முதல்ல நீங்க சாணி மிதிச்சிட்டு வந்துட்டீங்களா என்று பாருங்கள் என்று சொல்லுடா அப்படின்னு சொன்னதும் அவனும் கேட்டுட்டான்.

Madha Gaja Raja release date: Vishal and Santhanam starrer action comedy by  Sundar C hits big screens in January after 12-year delay | PINKVILLA

லேடி டீச்சர்ஸ் முன்னாடி அசிங்கமா போயிருச்சுன்னு அவன கூப்பிட்டு அவரு அடிச்சிட்டாரு. உடனே அவன் எங்கிட்ட வந்து என்னை திட்டுனா உன்னால தான் சாரி என்னை அடித்துவிட்டார் என்று. பிறகு கீழ இறங்கி அவர் போய் பார்த்ததும் உண்மையிலேயே அவர் காலில் தான் சாணி இருந்தது. அத தொடச்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி வந்து பஸ்ல உட்கார்ந்து கொண்டார். அது உண்மையா என்று டெஸ்ட் பண்ண என் பிரண்டு கிட்ட சொல்லி சாணி என கூப்பிடு என்று சொன்னன். அவன் சாணினு கூப்பிட்டதும் அவரும் திரும்பி பார்த்தாரு. உடனே ஒட்டுமொத்த பஸ்லயும் இருக்க எல்லா பசங்க கிட்டயும் சொல்லி சாணி என்று கூப்பிட சொன்னதும் வந்து சேர்ர வரைக்கும் அவர எல்லாரும் ஒட்டிக்கிட்டே வந்தோம். ஸ்கூல்ல நான் ஒரு வில்லத்தனமான ஆள் தான் என்று சந்தானம் பேசியுள்ளார்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

santa_santhanam பதிவைப் பகிர்ந்துள்ளார் (@santhanam.offl)