என் அப்பா சினிமாவுக்குள் இந்த எண்ணத்தோட தான் வந்தாரு… ஆனா நடக்கல… மனம் திறந்த கண்ணதாசனின் மகன்…

By admin on தை 15, 2025

Spread the love

கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய புகழ் பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். நான்காயித்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயித்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் கட்டுரைகள் என ப எழுதியவர். இவரது இயற்பெயர் முத்தையா. தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகுடல்பட்டி என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர்.

   

பாடலாசிரியராக மட்டுமல்லாமல் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். தனது படைப்பிற்காக சாகித்ய அகடமி விருதை வென்றவர் கண்ணதாசன்.

   

கவியரசு கண்ணதாசன் அவர்கள் பல வாழ்க்கை தத்துவ பாடல்களை எழுதியதன் மூலம் பிரபலமானவர். வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை அசால்டாக தனது பாடலின் மூலம் வெளிப்படுத்திவர் கண்ணதாசன். எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு ஹிட் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். இந்நிலையில் கண்ணதாசன் முதலில் பாடலாசிரியராக வரவேண்டும் என்று சினிமாவிற்குள் வரவில்லையாம். அவருக்கு வேறொரு ஆசை இருந்திருக்கிறது. இதைப்பற்றி அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியிருக்கிறார்.

 

அண்ணாதுரை கண்ணதாசன் கூறுகையில், “எனது அப்பா சினிமாவிற்குள் நடிகனாக வேண்டும் என்ற விருப்பத்தோடு தான் வந்தார். அதற்காக தனது பெயரை சந்திரமோகன் என்று மாற்றிக்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. பாடல் எழுதுவதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அவர் மனமார ஏற்றுக்கொண்டு பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அதோடு நிறுத்தவில்லை திராவிட கட்சிகளுக்காகவும் காங்கிரஸ் கட்சிக்காகவும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடகங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் என் தந்தை கண்ணதாசன்” என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன்.