“தன் பொண்ணு கல்யாணத்த விட இதுதான் முக்கியம்”.. உதவி கேட்டு வந்த நபருக்கு வறுமையில் உதவிய சாவித்திரி..!

By Nanthini on தை 15, 2025

Spread the love

சாவித்திரி தன்னுடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அள்ளிக் கொடுப்பவர். அப்படித்தான் சாவித்திரி இடம் பணமே இல்லாத சமயத்தில் தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதனால் சாவித்திரிக்கு பண உதவி தேவைப்பட்டது. அப்போது ஒரு நபர் சாவித்திரி இடம் உதவி கேட்க வந்துள்ளார். உடனே சாவித்திரி அவரிடம், நானே என்னுடைய மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் இருக்கிறேன், இப்படிப்பட்ட சூழலில் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்று கூறி அவரை அனுப்பி விட்டார்.

பசியில் வாடிய சாவித்திரி; ஸ்டுடியோ இயக்குனர் கொடுத்த சாப்பாடு: நடிகையர்  திலகம் பட்ட துயரம்

   

சில நாட்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவர் சாவித்திரியை ஒரு புதிய திரைப்படத்திற்கு புக் செய்ய அவரிடம் முன்பணம் கொடுத்துள்ளார்.  அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சாவித்திரி சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் உதவி கேட்க வந்த நபரை அழைத்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். உடனே அந்த நபர் உங்களுடைய மகளின் திருமணத்திற்கு பணம் இல்லை என்று சொன்னீங்க இப்போ எனக்கு இந்த பணத்தை கொடுத்து விட்டீர்கள் என்றால் திருமணத்திற்கு என்ன செய்வீங்க என்று கேட்டுள்ளார்.

   

இறுதி நாட்களின் பெருந்துயரம் | இன்று நடிகை சாவித்ரி நினைவுதினம்! | Today  savithri death anniversary - kamadenu tamil

 

அதற்கு சாவித்திரி, இந்த பணத்துடன் நான் வீட்டுக்கு சென்றால் இதனை வைத்து என் மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என தோன்றிவிடும். அதனால் தான் இப்போதே உன்னிடம் கொடுத்து விட முடிவு செய்தேன். என்னுடைய மகளின் திருமணத்தை அந்த ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று கூறி பணத்தை அவரிடம் சாவித்திரி கொடுத்து அனுப்பி வைத்தார். சாவித்திரி பிறருக்கு உதவி செய்வதை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே வைத்திருந்தார் என்பது பலரும் அறியாத உண்மை.