துருவ நட்சத்திரம் முதல் சதுரங்கவேட்டை-2 முதல்…. பல ஆண்டுகளாகியும் ரிலீஸ் ஆகாமலிருக்கும் படங்கள் இத்தனையா..?

By Soundarya on தை 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கும் தமிழ் சினிமாக்கள் எத்தனை இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

   

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடித்த துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ், டிடி, ராதிகா, விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் . இந்த படம் நிதி பிரச்சனை காரணமாக கடந்த 2017 ஆம் வருடமே எடுத்து முடித்தும் ரிலீஸ் செய்யாமல் உள்ளார் கௌதம் மேனன்.

   

 

துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் நரகாசுரன். இந்த படத்தில் ஆத்மிகா, ஸ்ரேயா சரண், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தையும் கெளதம் மேனன் தயாரித்திருந்தார் .இந்த படமும் நிதி பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பார்ட்டி .இந்தி மிர்ச்சி சிவா, ஜெய், சத்யராஜ், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா செட்டி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ள இந்த படத்தை டி சிவா தயாரித்துள்ளார். தீவில் இந்த படத்தை படமாக்கி இதற்கான வரியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

விஜய் சேதுபதி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் இடம் பொருள் ஏவல். இந்த பாடத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், நந்திதா உள்ளிட்டோ நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படமும் எடுத்து முடித்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் இந்நீர் ரிலீஸ் ஆகவில்லை.

சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். இந்த படமும் எடுத்து முடிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாக முடங்கி கிடைக்கிறது.

தமிழ் பட இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கிய படம் தான் ரெண்டாவது படம். இந்த படத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் இந்த படமும் எடுத்து முடித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் சில பிரச்சனைகளால் இன்னும் ரிலீசாகவில்லை.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்று சதுரங்க வேட்டை-2 திரைப்படமும் ஒன்று. இதன் முதல் பாகம் எச் வினோத் இயக்கத்தில் வெளியானது. இதனை எடுத்து இரண்டாம் பாகத்தை திரிஷா , அரவிந்த்சாமி ஆகி வைத்யாரை வைத்து பிரமாண்டமாக எடுத்திருந்தார்கள். ஆனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.