பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் அர்ணவ், ரவீந்தரை சீண்டி பார்த்த சத்யா, ஜெஃப்ரி.. சூடு பிடிக்கும் சண்டை.. வெளியான ப்ரோமோ..!

By Nanthini on தை 13, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. கமல்ஹாசன் அளவுக்கு நிகழ்ச்சியை எந்தவித குறையும் யாரும் சொல்லாத அளவுக்கு விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இருந்த போதும் சில கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்குள் நுழைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக டபுள் எபிக்ஷன் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த வாரமும் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளது.

BB Tamil Day 91: `அழ வேணாம்ன்னு இருக்கேன்; அழ வெச்சிடாத!' - வெளியேறிய  மஞ்சரி, அடுத்தது யார்? | bigg boss tamil season 8 day 91 highlights -  Vikatan

   

முன்னதாக நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் ராயன் வெற்றி பெற்ற நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்ற நிலையில் அடுத்ததாக தீபக், அருண், முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின், VJ விஷால் மற்றும் சௌந்தர்யா என ஏழு பேர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகிய இருந்தனர். இந்த நிலையில் தீபக் மற்றும் அருண் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

   

டைட்டில் கிடைக்கலனா என்ன, வெயிட்டான சம்பளத்துடன் வெளியேறிய தீபக்.. எத்தனை  லட்சங்கள் தெரியுமா? - Cinemapettai

 

ஏற்கனவே கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ள நிலையில் இன்று போட்டியாளர்கள் சத்யா மற்றும் ஜெஃப்ரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் இருவரும் சேர்ந்து அர்ணவ் மற்றும் ரவீந்தரை கிண்டல் செய்கின்றனர். உடனே ரவிந்தர் உங்களைவிட எங்களுக்கு பயங்கரமா fun பண்ண தெரியும் என்று கோபத்துடன் கூறுகிறார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.