வணங்கானின் 3 நாள் வசூலை ஒரே நாளில் அள்ளிய மதகஜராஜா.. வெளியான முதல் நாள் கலெக்ஷன் விவரம்..!

By Nanthini on தை 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் உள்ளிட்டோ நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதகஜராஜா. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 வருடங்கள் கழித்து படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஷால் மற்றும் சந்தானத்துடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். 12 வருடங்களுக்குப் பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் பேரதரவை பெற்று வருகிறது. விஷாலின் மதகஜராஜா படம் முதல் நாளில் சிறப்பான ஓப்பனிங் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12 வருடங்கள் கழித்து பொங்கல் ரிலீஸூக்கு தயாரான 'மதகஜராஜா' திரைப்படம்! |  After 12 years, 'Madagajaraja' movie is ready for Pongal release - kamadenu  tamil

   

அதுமட்டுமல்லாமல் இந்த பொங்கல் வின்னரே மதகஜராஜா திரைப்படம் தான் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. சமீபத்தில் நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து அவரை தீவிர நோயாளியாக சித்தரித்த நிலையில் தனக்கு இருந்தது வெறும் வைரல் காய்ச்சல் மட்டும் தான் என்றும் தற்போது நான் நலமுடன் இருக்கிறேன் என்றும் மீண்டு வந்து விஷால் பதிலடி கொடுத்திருந்தார். இரண்டு மணி நேரம் படம் போறதே தெரியவில்லை லாஜிக் இல்லை என்றாலும் காசு கொடுத்து படத்துக்கு போகும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்புவதே சிறப்பான விஷயம் என படத்தை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

   

vishal madha gaja raja madhagajaraja box office

 

படத்தில் இடம்பெற்ற விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்க முதல் நாளில் அதிகபட்சமாக படம் 3.2 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வணங்கான் திரைப்படம் முதல் நாளில் 95 லட்சம் ரூபாயும் இரண்டாம் நாளில் 1.15 கோடி, மூன்றாம் நாளில் ஒரு கோடி ரூபாயும் என மொத்தமாக மூன்று புள்ளி ஐந்து கோடி வசூல் செய்துள்ள நிலையில் முதல் நாளே இந்த பொங்கல் ரேசில் வணங்கான் படத்தை விஷாலின் மதகஜராஜா திரைப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.