துபாயில் 24H கார் ரேஸில் இந்திய கொடியை பறக்க விட்ட அஜித்.. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!

By Nanthini on தை 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் பொங்கல் ரேசில் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட விடா முயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து இந்த படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அதன் அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் சூட்டிங் மற்றும் படப்பிடிப்பு என அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொடுத்து விட்ட அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்பதற்காக சென்று உள்ளார்.

வெளிவந்த ரிசல்ட்! 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் வெற்றியடைந்தாரா அஜித் குமார்.. | Ajith Won Third Place In 24Hseries Car Race

   

முன்னதாக சிங்கப்பூரில் தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் தான் மட்டும் துபாய் சென்ற நிலையில் ஷாலினி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் ரேசில் பங்கேற்பதற்காக அடுத்தடுத்த பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியானது. இப்படியான நிலையில் நேற்று துபாய் 24H கார் பந்தய ரேசிலிருந்து அஜித் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பயிற்சியின்போது அவருடைய கார் விபத்துக்குள்ளானதால் ஒரு போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளதாகவும் ஆனால் porsche Gt4 போட்டியில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது. நேற்றைய தினம் கார் பந்தயம் நடந்த இடத்திற்கு அஜித் வந்த நிலையில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

   

வெளிவந்த ரிசல்ட்! 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் வெற்றியடைந்தாரா அஜித் குமார்.. | Ajith Won Third Place In 24Hseries Car Race

 

 

அனைவரும் தல என்று உற்சாகமாக கத்திய நிலையில் அஜித்தும் அவர்களை பார்த்து கையசைத்தார். இந்நிலையில் 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த கார் ரேஸ் நேற்று மதியம் 1.30 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த கார் ரேஸில் Porsche 992 என்கிற காருடன் அஜித் குமாரின் குழு 3வது இடத்தை பிடித்துள்ளனர். டாப் 3ல் இடத்தை பிடித்துள்ள நிலையில் தனது வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் அஜித் தனது கையில் இந்திய கொடியை ஏந்தி அனைவரையும் சந்தித்தார். அஜித்தின் இந்த வெற்றியை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.