சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனது விடாமுயற்சி மற்றும் உழைப்பினால் இன்று சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவாகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதற்குப் பிறகு காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா போன்ற கமர்ஷியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சமீபத்தில் இவர் நடித்த “அமரன்” திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அதிலிருந்து இவர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பாலிவுட் நடிகர் அமீர்கான் என் நடிப்பை பாராட்டினார். என்னுடைய முதல் படம் அவருடைய தயாரிப்பில் தான் இருக்கணும் அதனால் நீங்கள் நல்ல கதை இருந்தால் கொண்டு வாருங்கள் என்று அமீர்கான் என்னிடம் கூறினார் என்று கூறியிருந்தார். அவர் இப்போது கொடுத்திருக்கும் நேர்காணல் ஒரு நேஷனல் மீடியாவுக்கு தான்.

இதே நேஷனல் மீடியாவில் தான் ஒரு மாதத்திற்கு முன்பு நயன்தாரா நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் பல சர்ச்சையானயான விஷயங்களையும் பகிர்ந்து இருந்தார். தற்போது அதே நேஷனல் மீடியாவிற்கு சிவகார்த்திகேயனை நேர்காணல் செய்யும்படி சிபாரிசு செய்தது நயன்தாரா தானாம். ஏற்கனவே பாலிவுட் கனவில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த நேஷனல் மீடியாவில் நேர்காணல் செய்யும்போது அது நல்ல ஒரு ரீச் கொடுக்கும் என்று அவர் இதில் கலந்து கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அடுத்தது சிவகார்த்திகேயனின் கனவு பாலிவுடில் நடிப்பது என சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
