நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் அதன் பிறகு முழு நேர அரசியல் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடத்திய தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரன்டதால் அவருடைய அரசியல் என்ட்ரி அட்டகாசமாக ஆரம்பமாகி உள்ளது. இப்படி விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருந்தது. இதற்காக பல முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டு வந்தார்.

ஆனால் சஞ்சய் தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்று சொன்னதால் அவருடைய விருப்பப்படி என்ன செய்ய விரும்புகிறாரோ அதே செய்யட்டும் என்று விஜய் விட்டுவிட்டார். இதனிடையே கடந்த ஆண்டு நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

அந்த படத்தில் நடிக்க ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய விஜய் மகன் இறுதியாக நடிகர் சந்திப் கிஷனிடம் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இன்னியிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தமன், “ஒரு பெரிய ஹீரோவோட பையன் எப்படி இயக்குனரா ஆகணும்னு நினைச்சார்னு தெரியல.

அவர் என்கிட்ட வந்து கதையை சொல்லும்போது ஷாக் ஆக்கிட்டேன். அவ்ளோ அருமையான கதை. இந்த கதையை சொன்ன பெரிய பெரிய ஹீரோ கூட நடிப்பாங்க. ஆனா அவரு சந்தீப் கிஷன் தான் வேணும்னு பிடிவாதமா சொல்லிட்டாரு. எனக்கு தெரிஞ்சி அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். அவரு எப்போதுமே விஜயோட பையன்னு கட்டிக்கவே மாட்டாரு. ரொம்பவே சிம்பிளா இருப்பாரு” என்று கூறியுள்ளார்.
