மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கும் பிக்பாஸ் மஞ்சரி.. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!

By Nanthini on தை 6, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் எந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

BB Tamil: `சிங்கிள் மதரா எவ்வளவோ எதிர்கொண்டிருக்கிற அக்கா, 'பிக்பாஸ்'ல..!' - மஞ்சரியின் தங்கை யாழினி | bigg boss tamil 8 contestant manjari's profile - Vikatan

   

கமல்ஹாசன் அளவுக்கு பார்வையாளர்கள் யாரும் குறை சொல்லாத வகையில் இந்த நிகழ்ச்சியை அவர் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்கள் உடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

   

 

டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று போட்டியாளர் ரயான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் எலிமினேஷன் செய்யப்பட்டனர்.

இதில் போட்டியாளர் மஞ்சரி ரசிகர்களின் பேராதரவை பெற்று விட்டார். பட்டிமன்ற பேச்சாளரான மஞ்சரி போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டார். இவர் பல பட்டிமன்றங்களில் பேசி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த இவர் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இப்படியான நிலையில் மாடர்ன் ட்ரஸ்ஸில் மஞ்சரி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் மஞ்சரியா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.