தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய இரண்டு திரைப்படங்களில் அஜித் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருந்த நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது.

ஆனால் சில பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருந்த விடாமுயற்சி திரைப்படம் தள்ளி போவதாக லைகா நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அஜித்தின் திரைப்படம் எதுவும் வெளியாகாமல் இருப்பதால் இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இப்படியான நிலையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
அதாவது அஜித் ரசிகர்களை குஷி படுத்த அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லீ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை குறிவைத்து அஜித்தின் குட் பேட் அக்லீ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த செய்தியை படத்தின் தயாரிப்பாளர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
#GoodBadUgly arrives on April 10th❤️🙏🏻 @MythriOfficial @SureshChandraa pic.twitter.com/K6N1x7uANT
— Adhik Ravichandran (@Adhikravi) January 6, 2025
