கமலின் காஸ்ட்லியான முத்தம்.. தனிமையில் சுகன்யா சந்தித்த வலிகள்.. பல வருட உண்மையை உடைத்த பிரபலம்..!

By Nanthini on தை 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை சுகன்யா. காலம் கடந்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். இப்படியான நிலையில் சுகன்யா குறித்தும் அவர் சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சந்தித்த வழிகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் பொன்வண்ணன் மற்றும் நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சுகன்யா. அதன் பிறகு எம்ஜிஆர் நகரில், சின்ன கவுண்டர், கேப்டன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

குழந்தை பற்றி வெளிப்படையாக பேசிய சுகன்யா.. ஒரு வருஷம் தான் அதற்குள் எப்படி?  வதந்திகளுக்கு பதிலடி | Actress Sukanya Clarifies Rumors About Her Family  After Old Twitter ...

   

இந்தியன் படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. ஆரம்பத்தில் சில படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன சுகன்யா இந்தியன் படத்திலும் சில குறிப்பிட்ட காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று சொன்னார். அதுபோல மகாநதி படத்தில் லிப்லாக் சீனில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் நடிகைகள் வாக்குறுதியையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதியையும் ஓடுற தண்ணீரில் தான் எழுதி வைக்கணும். ஆர்த்தி தேவி என்பதுதான் சுகன்யாவின் உண்மையான பெயர். புது நெல்லு புது நாத்து படத்தில் சுகன்யா என்று பாரதிராஜா பெயர் மாற்றினார். இவர் காலச்சேத்ரா மாணவி, அரங்கேற்றமும் செய்துள்ளார்.

   

மகாநதி செய்த மாயம்.. கமல் கொடுத்த காஸ்ட்லி முத்தம்.. மறுத்து இடம் கொடுத்த  சுகன்யா…' - காரணம் உடைத்த பிரபலம்!

 

சினிமாவிற்கு சுகன்யா வருவதற்கு முன்பு தங்க வியாபாரி ஒருவர், உடையில்லாமல் தங்கத்தை மட்டும் அணிந்து டான்ஸ் ஆட வேண்டும், இதற்காக பல லட்சங்களை தருவதாக கூறியுள்ளார். ஆனால் சுகன்யா டான்ஸ் ஆடினாரா இல்லையா என்ற தகவல் சரியாக தெரியவில்லை. ஆனால் எந்த காலத்திலும் சுகன்யா கிளாமராக நடித்ததில்லை. அப்படி நடிக்கவும் அவர் விரும்பவில்லை. அதே சமயம் கமல்ஹாசன் எந்த ஒரு நடிகையுடன் நடித்தாலும் அந்த படத்தில் முத்த காட்சி கண்டிப்பாக இருக்கும். சில நடிகைகள் அதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள். மகாநதி படத்தில் சுகன்யாவை கமிட் செய்யும்போது எல்லோரும் அவரிடம் கமல் படம் என்றால் முத்தக் காட்சி இருக்குமே என்று கூற, நீங்க ஓகே சொல்லி விட்டீர்களா என்று கேட்டனர்.

22 Years of Indian: Five lesser known facts about Kamal Haasan's Indian |  Tamil Movie News - Times of India

அதற்கு கமலுடன் நடிப்பது உறுதி தான் ஆனால் அவருடன் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் அவர் முத்தக் காட்சியில் படத்தில் நடித்திருந்தார். கமலின் முத்தம் காஸ்ட்லியானது அல்லவா, கமல்ஹாசன் சிறையில் இருந்து வெளியே வரும்போது அந்த காட்சி இடம்பெற்று இருக்கும். இந்தியன் படத்தில் வெள்ளைக்காரர்கள் சுகன்யா இணைந்திருந்த ஆடைகளை பிடுங்கி நெருப்பிலிட்டு எரித்து விடுவார்கள். இந்த சீன் எடுத்து முடித்து விட்டது. அதன்பிறகு நிர்வாணமாக நகர்ந்து போகும் படியான சீன் ஒன்று ஒரு டுப்பை வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுகன்யா கோபப்பட்டார்.

Sukanya Daughter Photo: அடேங்கப்பா... சும்மா ஹீரோயின் போல் இருக்கும் நடிகை  சுகன்யாவின் மகள்! வைரலாகும் போட்டோ! - actress sukanya daughter look like  heroine latest photos viral in ...

நிர்வாணமாக நடந்து செல்லும் டூப் காட்சியின் பிலிம் தனக்கு தர வேண்டும் இல்லாவிட்டால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று தகராறு செய்துள்ளார். பிறகு அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கர் என அனைவரும் டைரக்டர் யூரின் வரை இந்த விவகாரத்தை கொண்டு சென்றனர். இறுதியாக தயாரிப்பாளர் கேஆர் தான் இதற்கு சமூக முடிவு எடுத்து சுகன்யாவை சமாதானம் செய்தார். சினிமாவில் இப்படி வெளிப்படை தன்மையுடன் கிளாமர் காட்டாமல் நடித்திருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னவோ சுகன்யா சந்தித்தது வலிகள் தான்.

Suganya daughter pic goes viral

அவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு வருடத்திற்குள்ளேயே திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அவரிடம் பலமுறை கேட்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தான் சொந்தமாக ஒரு நடனப் பள்ளியை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்துவதாக அவரே பலமுறை கூறியுள்ளார். தற்போது 50 வயதிற்கு மேலாகும் சுகன்யா மறு திருமணம் செய்து கொள்ளாமல் இன்றுவரை தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார் என்று சபிதா ஜோசப் பேட்டியில் பேசியுள்ளார்.