அமரன் பட வெற்றிக்கு பின் ஆட்டம் போடும் SK… ஷூட்டிங்க் ஸ்பாட்டில் செய்த காரியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

By Soundarya on தை 5, 2025

Spread the love

சிவகார்த்திகேயனுக்கு கடந்த வருடம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்றே சொல்லலாம். கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான அயலான், தீபாவளிக்கு வெளியான அமரன் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து வெற்றியை குவித்தது.  குறிப்பாக அமரன் படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.  அடுத்து எஸ் கே 23வது படம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தின் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது சுதா கொங்கராவின் இயக்கத்தில் 25வது படத்தில் நடித்து வருகிறார் எஸ்கே.

Theater owners' association demands for 'Amaran' film crew|'அமரன்' படக்குழுவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

   

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவருடைய நடவடிக்கைகள் தெரிந்ததும் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகியிருக்கிறது.  டான் படம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும் உருவாகி வருகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்  இசையமைக்கிறார். இது ஜிவி பிரகாஷின் 100வது படம். இந்த படத்தில் முதலில் சூர்யா நடிக்கும் ஒப்பந்தமாகி அதன் பிறகு அதிலிருந்து விலகியதால் சிவகார்த்திகேயன் கமிட்டாகி நடித்து வருகிறார்.

   

துப்பாக்கி மிகவும் கனமானது” - 'அமரன்' நிகழ்வில் சிவகார்த்திகேயன் | sivakarthikeyan speech at amaran movie event video viral in social media - hindutamil.in

 

இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு முதலில் புறநானூறு என்று வைக்கப்பட்டது . தற்போது 1965 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் அளவுக்கு இருப்பதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ., ஹீரோயின் வில்லன், இயக்குனர் என இப்படித்தான் கேரவன்கள் வரிசையாக இருக்கும்.

அரசியல் களத்திற்கு தயாராகிறாரா நடிகர் விஜய்.. வலைப்பேச்சு பிஸ்மி சொல்வது என்ன? | Valai Pechu Bismi talks about Vijay's political entry - Tamil Filmibeat

ஆனால் சிவகார்த்திகேயன் கேரவனுக்கு பக்கத்தில் பெரிய இடைவெளி இருக்கிறதாம். அங்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய அலுவலகத்தை போட்டு இருக்கிறாராம்.  இது படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று பேசி வருகிறார்கள். இதற்கு முன்பாக எந்த நடிகரும் இதுபோல செய்தது இல்லையாம்.