iliyana

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்த விஜய் பட நடிகை… ஆனா இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்…

By admin on தை 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் விஜய். தற்போது சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அரசியலில் இறங்கபோவதாக கூறியிருக்கிறார். விஜய் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷன் பெரும். அதே போல் விஜய் கூட நடித்தால் போதும் அந்த நடிகைகள் பிரபலமாகி விடுவார்கள். அப்படி விஜய் உடன் நண்பன் திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர் தான் நடிகை இலியானா.

   

நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய “கேடி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அதற்குப் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்ற இலியானா பிரபாஸ் மகேஷ் பாபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார் இலியானா. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷங்கர் இயக்கிய விஜய் நடித்த நண்பன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து புகழ்பெற்றார்.

   

அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இலியானா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞருடன் living together இல் இருப்பதாக கூறி ஒரு காலகட்டத்தில் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதை பார்த்து அவரது ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவருக்கு திருமணமே ஆகவில்லையே எப்படி கர்ப்பமானார் என்று பேசி வந்தனர்.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர்தான் தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தினார் இலியானா. மைக்கேல் டோலன் என்பவர்தான் தனது கணவர் என்பதையும் கூறினார். இந்நிலையில் புத்தாண்டு பிறந்த பிறகு தனது insta பக்கத்தில் இலியானா தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதை அறிந்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.