நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த படக்குழு அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட டப்பிங் பணிகளை அஜித் முடிந்த நிலையில் தற்போது பின்னணி இசை காண பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஆனால் விடா முயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவித்த படக்குழு அதற்கான வேலைகளை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. அதாவது பொங்கல் ரிலீஸ் ஆக இருந்திருந்தால் இந்த படத்தை கடந்த வாரமே சென்சருக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியே ரெடி ஆகாத காரணத்தால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் லைகா நிறுவனமும் நிதி நெருக்கடியில் உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க லைகா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விடாமுயற்சி படத்தின் வீடியோ கிளிப்பில் எந்த இடத்திலும் அது பொங்கலுக்கு ரிலீசாகும் என குறிப்பிடப்படவில்லை. எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என மகிழ்த்திருமேனி முடிவு செய்துள்ள நிலையில் அடுத்த பத்து நாட்கள் அதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கும் என தெரிகிறது. வருகின்ற ஆறாம் தேதி படம் வெளிநாட்டில் சென்சருக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் சென்சார் உரிமையை பெறுவதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
![]()
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அனைவரும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு கிளம்பிச் சென்று படம் ரிலீஸ் பண்ணுவீங்களா மாட்டீங்களா என்று கேட்டுள்ளனர். அவர்களை ஒருவழியாக பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மகிழ்திருமேனிக்கு பலரும் போன் செய்து படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என கேட்ட நிலையில் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இப்படி பல சிக்கலுக்கு நடுவில் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியாகுமா ஆகாதா என்பது சற்று சந்தேகமாக தான் உள்ளது.
