fit

Gym- க்கு போகம உடம்பு Fit- ஆ இருக்கணுமா….? தினமும் இந்த 5 எளிமையான வழிகளை பின்பற்றுங்க…

By admin on மார்கழி 29, 2024

Spread the love

அனைவருக்கும் உடம்பை Fit ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை பாஸ்ட் புட் முறைகளால் அனைவருக்கும் உடல் எடை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பல உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு டயட் ஜிம் போன்றவற்றிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் நீங்கள் ஜிம்முக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஒரு சில எளிய பயிற்சிகளை செய்யும் போது உங்களால் Fit ஆகா இருக்க முடியும். அதற்கு இந்த ஐந்து வழிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

   

முதலில் உடம்பை Fit ஆக வைத்துக் கொள்வதற்கு மிகச் சிறிய எளிமையான உடற்பயிற்சியை தவறாமல் தினமும் கடைபிடிக்க வேண்டும். push ups, சிறிய Exercise ஆகியவற்றை தவறாமல் தினமும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களுக்கு அதனுடைய மாற்றங்கள் தெரியும்.

   

அடுத்ததாக உங்களுக்கு விருப்பமான ஒரு குறிப்பிட்ட விளையாட்டை தினமும் விளையாடலாம். கிரிக்கெட், பேட்மிட்டன், டென்னிஸ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் செயல்பாடு மிகவும் முக்கியமானது. நீச்சல், நடனம் போன்றவற்றையும் நீங்கள் மேற்கொள்ளலாம். தினமும் ஏதேனும் ஒன்றை செய்யும்போது உங்கள் உடம்பு Fit ஆக இருக்கும்.

 

அடுத்தது வாக்கிங். காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. இதனால் செரிமானம் சீராக இருப்பதோடு எடையும் கட்டுக்குள் இருக்கும். இருவேளையும் நடக்க முடியாவிட்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு முறையாவது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை நடக்கலாம். தினமும் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது மிகவும் சிறப்பானது.

உடம்பை ஃபிட்டாக வைப்பதற்கு மற்றொரு வழி யோகா. எளிமையான யோகாசனங்களை செய்யலாம். ஆன்லைன் வீடியோக்கள் பார்த்தும் செய்யலாம். இது உங்கள் மனதையும் மூளையும் புத்துணர்ச்சியோடு வைக்க உதவும். அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஆகியவை இந்த யோகா செய்வதன் மூலம் நமக்கு குறையும். உடை எடை அதிகரிப்பதற்கு ஸ்ட்ரெஸ் ஒரு காரணம் தான்.

இவை அனைத்திற்கும் மேலாக உங்களது பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும். ஆரோக்கியமான பழக்கவழக்கத்தை பின்பற்ற வேண்டும். லிப்ட் க்கு பதிலாக படிக்கட்டுகள் பயன்படுத்துவது, பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு நடந்து செல்வது, சைக்கிள் பயன்படுத்துவது, சத்தான உணவுகளை சாப்பிடுவது இரவு 7:00 மணிக்கு உள்ளாகவே இரவு சாப்பாட்டை முடித்து விடுவது போன்றவற்றை செய்யும்போது நம்மால் Fit ஆக இருக்க முடியும். இந்த வழிமுறைகளை பின்பற்றும்போது ஜிம்முக்கு செல்லாமல் உங்களால் மற்றவர்களை கவரும் அளவுக்கு Fit ஆக மாற முடியும்.