ராணவை டார்கெட் செய்த ஒட்டுமொத்த போட்டியாளர்கள்.. எலிமினேஷன் கார்டை தூக்கி விஜய் சேதுபதி.. வெளியான இன்றைய ப்ரோமோ..!

By Nanthini on மார்கழி 29, 2024

Spread the love

விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது 82 நாட்களை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.  கடந்த வாரம் Freeze டாஸ்க் என்பதால் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். இந்த வாரம் குடும்பத்தினர் வாரம் என்பதால் மிகவும் எமோஷனலாகவே சென்றது. அது மட்டுமல்லாமல் நேற்று முன்தினம் எபிசோடில் யாரும் எதிர்பாரா விதமாக போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வந்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.  இதுவரை பிக் பாஸ் சீசனில் நடைபெறாத ஒரு நிகழ்வு நடந்தது.

Bigg Boss Eviction This Week in Tamil : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு  கிளம்பிய போட்டியாளர்... கதறி அழும் கோவா கேங்க்! விஜய் சேதுபதி வைத்த  ட்விஸ்ட் | Times ...

   

அதாவது நேற்று முன்தினம் சௌந்தர்யா விஷ்ணுவிற்கு ப்ரபோஸ் செய்த காட்சி நடைபெற்றது. இது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அருணின் காதலியான அர்ச்சனா உள்ளே வந்திருந்தார். இவர் கடந்த சீசனின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடு பார்க்கும்போது பிக் பாஸ் காதல் ஜோடிகளின் களமாக மாறிவிட்டது போல் தெரிந்தது. நேற்று வார இறுதி விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று தகவல் வெளிவந்த நிலையில் விஜய் சேதுபதி Eviction கார்டோடு வந்து ஒருவரை எவிக்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினார். இதனை தொடர்ந்து போட்டியாளர் ஜெஃப்ரி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

பிக்பாஸ் டபுள் எவிக்‌ஷனில் அன்ஷிதா, ஜெஃப்ரி கூண்டோடு வெளியேற்றம் | biggboss  tamil 8 anshida jeffry eliminated from the house | HerZindagi Tamil

 

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பிக்பாஸ் போட்டியாளர்களிடம், இன்று வெளியேறப் போகும் போட்டியாளர் யாராக இருப்பாங்க என்று நினைக்கிறீர்கள் என கேட்கிறார். பெரும்பாலான போட்டியாளர்கள் ராணவ் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் எனக் கூறுகின்றனர். ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ராணவை டார்கெட் செய்ய தாமதிக்காமல் விஜய் சேதுபதி எலிமினேஷன் கார்டை தூக்கி காட்டுகிறார். அது யாராக இருப்பார்கள் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.