நான் எடுத்த அந்த படம் தப்பான படம்… ஓடாத வரை சந்தோஷம்தான்… இயக்குனர் விக்ரமன் தடாலடி!

By vinoth on மார்கழி 24, 2024

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

   

அதனால் கடைசியாக அவர் இயக்கிய படமாக மரியாதை படம் அமைந்தது. அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால் இப்போது சினிமாவில் இருந்து விலகி இடைவெளி எடுத்துக் கொண்டு அவரது மகனைக் கதாநாயகனாக்கியுள்ளார்.

   

 

விக்ரமன் படங்களின் பார்முலா என்னவென்று கூர்ந்து பார்த்தால் ஒரு எமோஷனலான கதைக்களம், அதைச் சுற்று நகைச்சுவை கதாபாத்திரங்கள் என நகர்த்திக் கொண்டே சென்று எமோஷனலாகக் கதையை முடிப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த பார்முலா தேய்வழக்காக ஆனதால் அவரது படங்கள் ஓடவில்லை.

ஆனால் விக்ரமன் தன்னுடைய பார்முலாவை விட்டு விலகி எடுத்த பெரும்புள்ளி மற்றும் புதிய மன்னர்கள் போன்ற படங்கள் கூட அவருக்கு வெற்றியைத் தரவில்லை. அதனால்தான் அவர் தன்னுடைய பார்முலாவுக்குள்ளாகவே சிக்கிக் கொண்டாரோ என்று கூட தோன்றுகிறது.

இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது படமாக மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்த பெரும்புள்ளி பற்றி அவர் பேசும்போது “அந்த படம் ரொம்ப தப்பான படம். அது ஓடவில்லை என்பதில் வருத்தம் இல்லை. அது ஓடியிருந்தால்தான் வருத்தப்பட்டிருப்பேன்” எனக் கூறியுள்ளார்.