சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் மனோஜின் முன்னால் காதலி திரும்பி வருகிறார். சரியாக முத்துவின் காரை எடுத்து அவர் பயணிக்கிறார். அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வருவது போல் தெரிந்தது. இந்த வாரம் இனி என்ன நடக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

இன்றைய எபிசோடில் முத்து மனோஜின் முன்னாள் லவ்வர் என்று தெரியாமல் அந்தப் பெண்ணை ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் செய்து கொண்டு ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் கூட்டி செல்கிறார். அவர் வெளியே காத்து கொண்டிருக்கும் போது மனோஜ் ரோகினி வருகிறார்கள். அப்போது முத்துவை பார்த்து விடுகின்றனர். அப்போது முத்து மனோஜிடம் என்னடா இந்த பக்கம் கூட்டமா வந்திருக்கன்னுகேட்கிறார்.
உடனே மனோஜ் நாங்க எங்கடா கூட்டமா வந்திருக்கோம். நானும் என் பிரண்டு ரோகினி மூணு பேர் தான வந்து இருக்கோம். நாங்க வீடு ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணனும் அதுக்கான டீடெயில்ஸ் கேட்க வந்திருக்கோம் என்று கூறிவிட்டு உள்ளே செல்கின்றனர். அங்கே மனோஜ் முன்னாள் காதலி இவர்களை பார்த்து டென்ஷனாகி உடனே வெளியே வந்து முத்து விடம் காரை சீக்கிரம் எடுங்க வீட்டுக்கு போகலாம் என்று சொல்கிறார்.
உடனே முத்து அவரை வீட்டில் சென்று விடுகிறார். அப்போது அவர் முத்துவுக்கு சில gifts கொடுக்கிறார். அதை வைத்து முத்து ஃபோட்டோ எடுத்தும் கொள்கின்றார். அடுத்ததாக விஜயாவும் அண்ணாமலையும் வாக்கிங் செய்து கொண்டே பேசிக்கொண்டு வருகின்றனர். வழக்கம் போல விஜயா பெருமை பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு இளநீர் கடைக்காரரிடம் இளநீர் வாங்கி குடித்துக் கொண்டு அண்ணாமலை விசாரிக்கிறார். அப்போது எந்த வீட்டு வாங்கி இருக்கிறீர்கள் என்று கடைக்காரர் கேட்க அண்ணாமலை விவரத்தை சொல்லவிட்டு சென்று விடுகிறார்.
உடனே அதை இளநீர் கடைக்காரர் சந்தேகத்துடன் உடனே போன் செய்கிற மாதிரி அந்த சீனை முடித்து இருந்தார்கள். அடுத்ததாக வீட்டில் மனோஜ் ரோகினி பேசிக்கொண்டிருக்கின்றனர். சீக்கிரமா இந்த வீட்ட ஃபுல்லா அமௌன்ட் கொடுத்து வாங்கி ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிடனும் ரோகிணி. நம்ம ரேஞ்ச் கொஞ்சம் கொஞ்சமா கூடிக்கிட்டே இருக்கு என்று கூறுகிறார். உடனே ரோகினி எனக்கு சந்தோசமா இருக்கு என்று சொல்கிறார் மனோஜ் என்கிறார். வீட்டுக்கு பெயர் அடிக்க நான் கொடுத்தவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருவாங்க என்று கூறுகிறார்.
அப்போது ஒரு நபர் கோபத்துடன் காரில் வந்து இறங்குகிறார். அதைப் பார்த்த மனோஜ் போர்டு தானே கொண்டு வந்து இருக்கீங்க குடுங்க என்கிறார். யார் வீட்டுக்கு யார் பெயர் வைக்கிறது என்று கேட்கிறார் அந்த நபர். நான்தான் இந்த வீட்டை வாங்கி இருக்கேன் என்று மனோஜ் கூறுகிறார். அதற்குள் குடும்பத்தார் அனைவரும் அங்கே வந்து விடுகின்றனர். வந்திருக்கும் நபர் அவன் வீட்ல வாடகைக்கு இருந்தவன் இது என்னோட வீடு என்று கூறுகிறார்.

உடனே மனோஜ் நான் அவருக்கு நான் போன் பண்றேன் என்று போன் பண்ணும் போது பணத்தை ஏமாற்றி சென்றவர் மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. அடுத்தது மனோஜின் காதலியை முத்து பிடித்து எங்க வீட்டில் வந்து உண்மையை கூறுங்கள் பணத்தை கூறுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது. இனி அடுத்தடுத்து மனோஜூம் ரோகிணியும் மாட்டுவது போல் புதிய திருப்பங்களுடன் எபிசோடு வருவது போலிருக்கிறது. இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
