வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சூரி பவானி ஸ்ரீ மஞ்சு வாரியர் கென் கருணாஸ் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இதுவரை காமெடியனாக நடித்து வந்த சூரி விடுதலை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி நல்ல விமர்சனங்களை பெற்றார். இவரின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.

விடுதலை படத்தின் முதல் பாகம் முழுவதும் சூரியை சுற்றியே கதை அமைந்திருந்தது. படத்தின் இறுதியில் தான் விஜய் சேதுபதி வருவார். அதோடு சஸ்பென்ஸோட முடித்து இருப்பார்கள். தற்போது விடுதலை பாகம் 2 திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் விஜய் சேதுபதி சுற்றியே இருக்கிறது. படத்தில் போராளியாக விஜய் சேதுபதி வருகிறார். படத்துக்கு இசை இளையராஜா. இந்த பாகம் இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரசிகர்களிலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த விடுதலை பாகம் 2 தற்போது வெளியாகி பலர் மிகவும் எமோஷனாக இந்த படம் இருக்கிறது சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் இருக்கிறது அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். படத்திற்கு வழக்கம் போல ப்ளூ சட்டை மாறன் ரிவியூ கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு அவர் என்ன விமர்சனத்தை கூறியிருக்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.

ப்ளூ சட்டை மாறன் விடுதலை பாகம் 2 படத்திற்கு கூறிய விமர்சனம் என்னவென்றால் பாகம் ஒன்று போல இந்த பாகம் இரண்டு இல்லை. விஜய் சேதுபதியை போராளியாக காட்டுவதற்கு பல போராட்டங்களை புரட்சிகளை செய்தார். மிகவும் அதிகமாக செய்திருக்கிறார் காதில் ரத்தம் வந்துவிட்டது. முதல் பாகத்தில் ஹீரோயின் சப்ஜெக்ட்க்கு மிகவும் வெயிட்டேஜ் இருந்தது. ஆனால் இந்த இரண்டாவது பாகத்தில் ஹீரோயினே தேவையில்லை. அவரது சீன்களை எடுத்துவிட்டால் கூட ஒன்றும் தெரியாது அந்த அளவுக்கு தான் இருந்தது. சூரி இந்த திரைப்படத்தில் பத்தோடு 11 ஆக தான் இருக்கிறார். கென் கருணாஸ் வந்த காட்சிகள் மிகவும் நன்றாக இருந்தது. அது தவிர கதையில் பல விஷயங்கள் தேவைக்கு அதிகமாக இருந்தது. இதுவரை வெற்றிமாறன் இயக்க படங்களில் விடுதலை– 2 ஒரு சுமாரான படம் தான் என்று இப்படி ஒரு விமர்சனத்தை கூறி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
