சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் பங்களா வீட்டை வாங்குவதற்கு 70 லட்சம் குறைவதால் தனக்கு சொத்தை பிரித்து தரும்படி மனோஜ் அண்ணாமலை மற்ற குடும்பத்தாரிடம் சண்டை இடுகிறார். முடிஞ்சா வீடு வாங்கு இல்லன்னா வாங்காத எதுக்காக எங்களையும் சேர்த்து இழுத்து விடுகிற என்று முத்துவும் ரவியும் சண்டை போடுகிறார்கள். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வெளியே ராவியும் ஸ்ருதியும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மனோஜ் ஏன் இப்படி selfish ஆ இருக்காருன்னு தெரியல படிச்சிருக்காரு ஆனா இப்படி பேசுறாரே என்று சுருதி கூறுகிறார். அதற்கு ரவி ஆமாம், முத்து கூட கொஞ்சம் எல்லாரும் பத்தி யோசிப்பான் ஆனால் மனோஜ் வந்து சின்ன வயசுல இருந்தே பக்கா செல்ஃபிஸ்தான் கூறுகிறார்.
அந்த நேரத்தில் மனோஜூம் ரோகிணியும் வீட்டிலிருந்து வெளியே வருகின்றனர். அவர்களிடம் வந்து எனக்கு ஒரு உதவி பண்ணனும் அப்படின்னு கேக்குறாங்க. என்னன்னு ரவி கேக்கும்போது எங்களுக்கு 70 லட்ச ரூபாய் பணம் குறையுதுல்ல ஸ்ருதியோட அப்பா வந்து Rich ஆன person தானே எங்களுக்கு ஒரு 70 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடு என்று கேட்கின்றனர். ஸ்ருதி நான் எல்லாம் எங்க டாடிட்ட கேக்க மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி நீங்க ஒரே பொண்ணு தானே எப்படி இருந்தாலும் உங்க டாடியோட சொத்துக்கு நீங்க தானே வாரிசு நீங்க கேட்டா தருவாங்கல என்று கூறுகிறார்.
அதெல்லாம் நம்ம கையில இல்ல ரோகினி நம்ம சம்பாதிப்பது தான் நம்ம பணம் நான் எங்க அப்பாகிட்ட இதுவரைக்கும் எதுவுமே கேட்டது கிடையாது நான் டப்பிங் பண்றேன் நான் சொந்தமா சம்பாதிக்கிறேன். நான் கேட்க மாட்டேன் என்று கூறுகிறார். உடனே மனோஜே ராவியிடம் நீயாவது கேட்டு பாருடா என்று சொல்லும்போது நான் எப்படிடா கேக்க முடியும் என்கிட்ட பணம் இருந்தா நான் கொடுப்பேன் என்ன போய் எங்க மாமனார் கிட்ட போய் பணத்துக்காக நிக்க சொல்றியே என்ன அடகு வைக்க சொல்றியா என்று சத்தம் போடுகிறார்.
மனோஜ் யாருமே எனக்காக ஹெல்ப் பண்ணவே மாட்டேங்கிறீங்க இல்லடா அவன் முத்து சுத்தமா ஹெல்ப் பண்ணவே மாட்டான் நீயுமாடா என்று மனோஜ் கேட்கிறார். அதற்கு நீ மட்டும் என்னடா நீ பண்ணின நான் முன்னாடி எல்லாம் கஷ்டப்படும் போது முத்து கஷ்டப்பட்டா கூட எனக்கு ஒரு சட்டையாவது வாங்கி தருவான் நீ எனக்கு ஏதாவது செஞ்சு இருக்கியா என்று சொல்கிறான். நான் அதெல்லாம் நினைக்கல என் கையில பணம் தான் நான் தருவேன் என் மாமனார் கிட்ட போய் நிக்க முடியாது என்று சொல்கின்றான். உடனே மனோஜ் சரிடா யாரும் எனக்கு செய்ய வேண்டாம் நான் பாத்துக்குறேன்னு ரோஹிணியை கூட்டிட்டு உள்ளே வந்து விடுகிறார்.
அப்போது ரோகினிடம் எல்லார்கிட்டயும் நான் இறங்கி போறதனாலதான இவ்வளவு பிரச்சனை என்று கூறுகிறான். உடனே அவங்க எல்லாத்துக்கும் பொறாமை மனோஜ் வேற எதுவுமே இல்ல நாம முன்னேறணும்னா கஷ்டப்படணும் இதெல்லாம் சமாளிக்கணும் என்று கூறுகிறார். அடுத்ததாக நீச்சல் குளம் பக்கத்தில் முத்துவும் மீனவும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது மனோஜ் இன் லவ்வர் ஏர்போர்ட்டில் பிக்கப் பண்ணுங்க என்று முத்துவுக்கு போன் செய்து கூறுகிறார். அதே போல் முத்துவும் செல்கிறார். அப்போ முத்துவிடம் நான் 30 லட்சம் பணம் ஒருத்தர்கிட்ட ஏமாந்துட்டேன் புடுங்கிட்டு போயிட்டாங்க என்று சொல்கிறார். முத்து நான் கண்டுபிடித்து தர நமக்கு நிறைய ஆள் தெரியும் என்று சொல்கிறார். இந்த விஷயத்தில் மனோஜ் ரோகினி மாட்டுவார்கள் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் மனோஜின் காதலியிடம் 30 லட்சம் பணத்தை அவர்கள் வாங்கி விட்டார்கள். ஆனால் முத்துவின் குடும்பத்திற்கு எதுவுமே தெரியாது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
