வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி இயக்குனர் ஆவார். இவரது தந்தை கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர். இவரது பெரியப்பா இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இவரது ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இளையராஜா அவர்களின் இசைக்குழுவில் பின்னணியில் பாடகராக தனது கேரியாரை தொடங்கினார் வெங்கட் பிரபு.

1996 இல் பூஞ்சோலை என்ற திரைப்படத்தில் சங்கீதாவுக்கு ஜோடியாக பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் அவரது தந்தை கங்கை அமரன் இயக்கியது, பிறகு துணை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் வெங்கட் பிரபு. ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு சென்னை 600028 என்ற திரைப்படத்தை 11 புதுமுகங்களை வைத்து இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இது கிரிக்கெட்டை மையமாக கொண்ட ஒரு படமாகும்.
2008 ஆம் ஆண்டு சரோஜா திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் வெற்றி பெற்றது. அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து மங்காத்தாவை இயக்கினார். இந்த திரைப்படம் மெகாஹிட் படமானது. தொடர்ந்து சென்னை 600028 பாகம் 2 மாநாடு தற்போது விஜயை வைத்து கோட் ஆகிய பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருக்கிறார் வெங்கட் பிரபு. இது தவிர பாடலாசிரியராகவும் இருந்திருக்கிறார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு.

கோட் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு வெங்கட் பிரபு பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. அடுத்ததாக படம் இயக்கவிருக்கிறாரா என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் ஏற்கனவே வெங்கட் பிரபு அஜித் குமாருக்கு இடையே ஏதோ ஒரு சிறிய மோதல் இருந்ததாம். தற்போது எல்லாம் சரியாகி இருவரும் மிகவும் நெருங்கி போன் நம்பரை மாற்றிக்கொண்டு டச்சில் இருந்து வருகிறார்களாம். அதனால் அடுத்ததாக கார் ரேசிங் போட்டிகளை முடித்த பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
