நான் அந்த படம் பண்ணும்போது வேணாம்னு சொன்னது ரெண்டே பேருதான்… பல வருடங்களுக்குப் பிறகு மனம்திறந்த அமீர்!

By vinoth on மார்கழி 19, 2024

Spread the love

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய ரத்தினங்கள் என்று பாலா, அமீர், விக்ரம் மற்றும் சசிகுமார் ஆகியோர்களை சொல்லலாம். அந்த படத்தில் இருந்துதான் அவர்களெல்லாம் புகழ் வெளிச்சம் பெற்று தங்களுடைய அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுத்தார்கள்.

   

இதில் இயக்குனர் அமீர் கொடுத்த கலையுச்சம் பெற்ற படைப்பு என்று பருத்திவீரன் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அவருக்கு 100 படங்களில் நடித்த கதாநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பைக் கிடைக்கவைத்தார். அந்த படைப்பின் பாதியைத் தொடுமளவுக்குக் கூட அமீரால் தன்னுடைய அடுத்த படத்தைக் கொடுக்க முடியவில்லை. இந்த படத்தின் உருவாக்கத்தின் போது தயாரிப்பு தரப்போடு அவருக்கு பிரச்சனை எழுந்தது. படம் ரிலீஸாகி 17ஆண்டுகள் கழித்தும் இன்னும் அந்த பிரச்சனை தீரவில்லை.

   

 

அதன் பிறகு இயக்குனர் அமீர் நடிப்பு, அரசியல் என தடம்மாறி போனார்.அவர் இயக்கத்தில் ஒரு படம் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர் தொடங்கிய சந்தனத் தேவன் மற்றும் இறைவன் மிகப் பெரியவன் ஆகிய படங்களும் பல காரணங்களால் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் தான் நடிகராக அறிமுகமான யோகி படத்தைத் தயாரித்து பெரிய நஷ்டத்துக்கு ஆளானது பற்றி ஒரு மேடையில் பேசியுள்ளார் அமீர். அதில் “நான் யோகி படம் பண்ணும்போது வேண்டாம் என சொன்னது இரண்டே பேர்தான். ஒன்று சமுத்திரக்கனி. இன்னொன்று பொன்வண்ணன் சார். ஆனால் நான்தான் இயக்குனருக்குக் கொடுத்த வார்த்தைக்காக அந்த படத்தை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.