தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 20 ஆண்டுகளாக தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்து வரும் நயன்தாரா சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நயன்தாராவின் ஆவணப்படம் வெளியான நிலையில் அதில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை இணைத்ததற்கு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு இருந்த நிலையில் நயன்தாரா அறிக்கை வெளியிட்ட பரபரப்பை கிளப்பி இருந்தார். இது தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் நயன்தாரா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்த நிலையில் தான் ஆறு தலைமுறை நடிகர்களுடன் நடித்த நடிகை என்றும் பெருமையாக கூறினார். அதாவது நடிகர் கவின் நான் ரொமான்ஸ் செய்யும் ஆறாவது தலைமுறை நடிகர். ரஜினி சார் , மோகன்லால் சார் மற்றும் மம்முட்டி சார் இவங்க எல்லாம் முதல் தலைமுறை. அடுத்து விஜய் சார் அஜித் சார் எல்லாம் இரண்டாவது தலைமுறை.

சூர்யா மற்றும் விக்ரம் இவங்க எல்லாம் மூன்றாவது தலைமுறை. அடுத்ததாக தனுஷ் மற்றும் சிம்பு நான்காவது தலைமுறை. சிவகார்த்திகேயன் ஐந்தாவது தலைமுறை. கவின் ஆறாவது தலைமுறை என்று நயன்தாரா பெருமிதம் கூறியிருந்தார். ஆனால் இதனை நெட்டிசன்கள் பயங்கரமாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்தந்த சீசனுக்கு தகுந்தது போல் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டு எப்படி தலைமுறை என்று உங்களால் கூற முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதாவது எம்ஜிஆர் என்றால் அவருக்கு மகன் வயதில் இருக்கும் ஒரு நடிகர் தான் இரண்டாவது தலைமுறை, அடுத்ததாக எம்ஜிஆருக்கு பேரன் இருந்திருந்தால் அவர் வயதில் இருக்கக்கூடிய ஒரு நடிகர் தான் மூன்றாவது தலைமுறை என்று நம்மால் சொல்ல முடியும். ஆனால் எப்படி சீசனுக்கு தகுந்தது போல் நடித்துவிட்டு தலைமுறை நடிகர்கள் என்று உங்களால் கூற முடியும் என ட்ரோல் செய்து வருகிறார்கள். இருந்தாலும் இதுவரை எந்த ஒரு நடிகையும் செய்யாத சாதனையை தான் நயன்தாரா செய்துள்ளார் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
