லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த லோகேஷ் கனகராஜ் கல்லூரியில் படிக்கும் போதே இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார். 2012 ஆம் ஆண்டு கார்ப்பரேட் குறும்பட போட்டியில் அச்சம் தவிர் என்ற குறும்படத்தின் மூலம் தனது கேரியரை ஆரம்பித்தார் லோகேஷ். இந்த குறும்படம் கிளோபஸ் குறும்பட விழாவில் சிறந்த இயக்குனர் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றது.

அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த அவியல் திரைப்பட தொகுப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கலாம் குறும்படமும் சேர்க்கப்பட்டது. அதன் மூலம் சினிமாவில் நுழைந்தார். 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு கைதி படத்தை இயக்கினர். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதன் மூலம் பிரபலமானார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்பட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். கைதி வெற்றிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் 2022 ஆம் ஆண்டு விக்ரம் 2023 ஆம் ஆண்டு லியோ போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த திரைப்படங்களும் வெற்றி பெற்றது.
அடுத்ததாக தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தின் பெயர் “BENZ”. இந்த திரைப்படத்தில் லாரன்ஸ் மாதவன் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் இந்த இளம் பெண் யார்?
லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர் அவந்திகா கனகராஜ். இவரது பெயரில் கனகராஜ் என்று வருவதால் இவர்தான் லோகேஷ் கனகராஜ் அவர்களின் மனைவி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர் லோகேஷ் கனகராஜன் மனைவி கிடையாது. இந்த அவந்திகா கனகராஜ் என்பவர் தளபதி விஜய்யின் மேனேஜர் ஆன ஜெகதீஷ் நடத்தும் ரூட் ஆர்டிஸ்ட் கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜன் மனைவி யார்?
கேப்டன் விஜயகாந்த் நடிப்பின் புகழின் உச்ச கட்டத்தில் இருந்தபோது ராவுத்தர் பிலிம்ஸ் என்ற ப்ரொடக்ஷனை நடத்தி வந்தார். அந்த தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தது விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் தான். இந்த ராவுத்தர் பிலிம்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பல படங்களில் நடித்தார் விஜயகாந்த். அப்போது அந்த தயாரிப்பு நிறுவனத்தின் குழுமத்தில் முக்கியமான கதை கேட்கும் பொறுப்பில் இருந்தவர்தான் சௌந்தர். இந்த சௌந்தர் அவர்களின் மகளை தான் லோகேஷ் கனகராஜ் திருமணம் செய்திருக்கிறார். இவர்களது திருமணம் ஒரு அரேஞ் மேரேஜ் தான். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
