பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி காபா நகரில் நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ரோஹித் சர்மா உடன் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்திய கிரிக்கெட் வீரராக சர்வதேச அளவில் அனைத்து ஃபார்மட்களிலும் இது எனது கடைசி ஆண்டாக இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரராக எனக்குள் இன்னும் அதிக ஆர்வம் இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால் நான் இதை கிளப் அளவிலான கிரிக்கெட்டில் மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று கூறினார்.
கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி ரகானே புஜாரா உள்ளிட்ட சக வீரர்கள் பயிற்சியாளர்கள் பிசிசிஐ உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார் அஸ்வின். பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் அஸ்வின்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் டெஸ்ட் மேட்ச் நடந்து கொண்டிருக்கையில் நடுவே ட்ரெஸ்ஸிங் ரூம்பில் விராட் கோலியை கட்டி அணைத்து தனது எமோஷனை வெளிப்படுத்தி இருக்கிறார் அஸ்வின். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.
