தயவு செஞ்சு குழந்தைகளுக்காக இதை செய்யுங்க.. மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி பெற்றோர்களுக்கு வைத்த கோரிக்கை..!

By Nanthini on மார்கழி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அனைவருடைய நினைவுக்கும் வருவது விவேக் தான். தன்னுடைய நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாக நமக்கு வழங்கி வந்தவர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவர் விவேக். தனது கல்லூரி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து முடித்தார். சிறுவயதிலேயே முறைப்படி பரதநாட்டியம் பயின்று தேர்ச்சி பெற்றவர் விவேக். அதுமட்டுமல்லாமல் ஆர்மோனியம் வயலின் தபேலா போன்ற இசை கருவிகளையும் அருமையாக வாசிக்க கூடியவர்.

சின்ன கலைவாணர்.. விவேக் மறைந்து ஒரு வருடமாச்சு.. முதல்வரிடம் விவேக் மனைவி  வைத்த உருக்கமான கோரிக்கை | Vivek name for the Chennai road Where His House,  Wife Arulselvi ...

   

தனது சகோதரியுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுவார் விவேக். அப்படி கலாஷேத்ரா பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்றார் விவேக். அப்போது இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 1980 களின் இறுதிகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விவேக். புதுப்புது அர்த்தங்கள் மின்னலே பெண்ணின் மனதை தொட்டு ரன் நம்ம வீட்டு கல்யாணம் முதலிய படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியிருப்பார் விவேக். இவரின் நகைச்சுவைகள் எதார்த்தமாக இருக்கும்.

   

Vivek: விவேக்கின் பணியைத் தொடரும் அவரின் மனைவி அருள் செல்வி; விவேக் 2-ம்  ஆண்டு நினைவு தினப் பகிர்வு | Actor Vivek 2nd Year Death anniversary Article  - Vikatan

 

அது மட்டுமல்லாமல் ஊழல் மூட நம்பிக்கை மக்கள் தொகை பெருக்கம் சமூக நீதி கருத்துக்கள் போன்றவற்றை தனது நகைச்சுவை மூலமாகவே எடுத்துரைப்பவர் விவேக்.  நல்ல ஆரோக்கியமான மனிதராக படத்தில் நடித்து வந்த விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு  மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய இழப்பு தமிழ் திரை உலகிற்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் விவேக் மனைவியை சமீபத்தில் அளித்த பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அதில், என்னுடைய கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார். அவருக்கு திடீரென இப்படி நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை.

ஷங்கர் சார் சொன்னது உண்மைதான்.. அவர் செஞ்ச புண்ணியம்தான் எங்கள இன்னைக்கு..'  - விவேக் இறப்பு குறித்து நெகிழ்ந்த மனைவி!

இருந்தாலும் என் சூழ்நிலை என்னை அதிலிருந்து சீக்கிரம் மீட்டுக் கொண்டு வந்தது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இது போன்ற ஒரு சூழல் நடைபெறலாம். அப்போது நாம் தான் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். நடந்ததை நினைத்து முடங்கி விடக்கூடாது. நாம் சோகமாக இருந்தால் நம் குழந்தைகள் நம்மை பார்த்து வளரும் போது அவர்கள் மனதிலும் அதுபோன்ற எண்ணங்கள் வரலாம். நாம் தைரியத்துடன் இருக்கும் போது நம் குழந்தைகள் நம்மை பார்த்து அம்மாவை தைரியமாய் இருக்காங்க என்று நினைத்துப் பாங்க. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக கட்டாயம் இதனை செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய கோரிக்கையும் என்று விவேக் மனைவி பேசியுள்ளார்.