தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நாயகனாக இருப்பவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.

1990களில் தனது 17 வது வயதில் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார். பின்பு குடும்ப கதையாம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 2000 களின் கால கட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துகள் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் விஜய். தற்போது விஜய் படங்கள் வெளிவந்தாலே ஹிட்டுதான் வசூல் சாதனை படைக்கும் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறார்.
ஆனாலும் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு கட்சிக்கொடி பாடல் மற்றும் மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார் விஜய்.
சமீப காலத்திற்கு முன்பு விஜயின் பிறந்தநாளுக்கு திரிஷா விஜய்யுடன் தனியாக லிப்ட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததிலிருந்து விஜய்யும் திரிஷாவையும் சுற்றி பல வதந்திகள் பரவி வருகிறது. விஜய்யும் த்ரிஷாவும் சீக்கிரட் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது போன்ற செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக த்ரிஷாவின் ஒவ்வொரு சமூக வலைதள பதிவும் இருக்கிறது.
இந்த விஷயத்தை கூட கொஞ்சம் வலுப்பெற செய்தது என்னவென்றால் விஜயின் மனைவி சங்கீதா எந்த ஒரு நிகழ்ச்சியுமே இடம்பெறவில்லை சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாகவும் இல்லை. சங்கீதா எங்கே போனார் விஜய் அவர் கூட வாழ்கிறாரா இல்லையா என்ற கேள்விகள் அவரது ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் திரிஷா ஆகியோர் சென்று இருக்கின்றனர். வரும்போது பிரைவேட் பிளைட்டில் இருவரும் சேர்ந்து பயணித்தது விமான நிலையத்தில் செக்கிங் நடந்த வீடியோ லீக் ஆகி இதைப் பலர் பேசி வருகின்றனர். இது சம்பந்தமாக பயில்வான் ரங்கநாதனும் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் கூறியது என்னவென்றால் பூனை பாலை சுற்றி வருவது போல விஜயை திரிஷா சுற்றி வந்து கொண்டிருக்கிறார். விஜயின் கட்சி ஆபீஸ்க்கு மேலே இருக்கும் பிளாடை த்ரிஷா விலைக்கு வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் வந்து ஒரு நல்ல கட்சியை தொடங்கி பெரிய பொறுப்பை ஏற்று இருக்கிறார். அவருக்கும் வயதுக்கு வந்த பெரிய மகனும் மகளும் இருக்கிறார்கள். அதனால் விஜய் திரிஷா திருமணம் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. இதுபோல கேர்ள் பிரண்ட் பாய் பிரண்ட் போல இருந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
