ரஜினியின் சினிமா வாழ்க்கையில் கே.பாலச்சந்தருக்கு அடுத்ததாக மிக முக்கியமானவர்தான் பஞ்சு அருணாச்சலம். ரஜினியை மிக சிறந்த நடிகராக மாற்றியவர் கே.பாலச்சந்தர் என்றால் ரஜினிகாந்தை ஸ்டார் ஆக மாற்றியவர் பஞ்சு அருணாச்சலம். ரஜினிகாந்தோடு இணைந்து பல திரைப்படங்களிலேயே பணியாற்றிய பஞ்சு அருணாச்சலம், அவரை முதல் முதலாக கவிக்குயர் படத்தினுடைய வெளிப்புற படப்பிடிப்பின் போது தான் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் சிக்மங்களூரில் தங்கியிருந்தார்கள். தினமும் ஷூட்டிங் முடிந்ததும் பஞ்சு அருணாச்சலத்தை பார்க்க ரஜினி வந்து விடுவாராம். அவரோடு பேசத் தொடங்கிய சில நாட்களில் இந்த சினிமா உலகிலே மிகப்பெரிய உயரத்தை தொட போகிற நடிகர் ரஜினி என்பது பஞ்சு அருணாச்சலத்திற்கு தெளிவாக தெரிந்தது.

அதன் காரணமாக தன்னுடைய படங்கள் எல்லாவற்றிலும் அவரை முக்கியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல் சந்திப்பின்போதே முடிவு எடுத்தார். கவிக்குயில் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் விஜயபாஸுடன் இணைந்து விஜய மீனா ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கிய பஞ்சு அருணாச்சலம் அந்த நிறுவனத்தின் சார்பிலே தயாரித்த முதல் திரைப்படம் தான் காயத்ரி. இது எழுத்தாளர் சுஜாதா எழுதிய திரைப்படம். அந்தக் கதை தினமணிக்கு எதிரிலே தொடராக வந்த போது அதை படித்த பஞ்சு அருணாச்சலம் இதை எடுத்தால் வித்தியாசமான படமாக அந்த கதை அமையும் என்று பஞ்சு அருணாச்சலம் எண்ணினார். அதனால் சுஜாதாவை தொடர்பு கொண்டு பேசினார். சுஜாதாவோடு அவருக்கு ஏற்கனவே நல்ல பழக்கம் இருந்தது.

இந்த கதையை சாவி சார் கேட்டதுக்காக நான் அவசர அவசரமாக எழுதிக் கொடுத்தேன். தினமணி கதையில் அது தொடராக வந்த போது அதை எதிர்த்து பல கண்டன விமர்சனங்கள் வந்தது. அப்படி இருக்கும்போது அந்த கதையை படமா எடுப்பதாக சொல்றீங்களே சரியா வருமா என்று கொஞ்சம் யோசிச்சுக்கோங்க என பஞ்சு அருணாச்சலத்திடம் சுஜாதா கூறியுள்ளார். அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் உரிமையை மட்டும் எனக்கு கொடுங்க என்று அவரிடம் கூறியுள்ளார். அந்த கதையை படமாக்கும் உரிமையை அவரிடமிருந்து பெற்றதும் ஆர் பட்டாபிராமன் என்ற பட்டு வை இந்த காயத்ரி படத்திற்கு இயக்குனராக பஞ்சு அருணாச்சலம் ஒப்பந்தம் செய்தார்.

ஜெய்சங்கர் கதாநாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்து 1977 ஆம் ஆண்டு வெளியான காயத்ரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை திரையரங்கில் பார்த்தபோது ஹீரோவான ஜெய்சங்கர் வில்லனான ரஜினியை அடிக்கும் போது மக்கள் திட்டினார்கள். அதுவே வில்லனான ரஜினி ஹீரோவான ஜெய்சங்கரை அடிக்கும் போது திரை அரங்கில் விசில் பறந்தது. இதனை உணர்ந்த பஞ்சு அருணாச்சலம் இனிமேல் வில்லனாக ரஜினி நடித்தால் மக்கள் யாரும் விரும்ப மாட்டார்கள் ஹீரோவாக நடித்தால்தான் மக்கள் விரும்புவார்கள் என்று அன்று முடிவு செய்தார். அதன் பிறகு தான் ரஜினி ஒரு ஸ்டாராக மாறினார்.
