விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பத்தாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் 35 முதல் 45 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. கடந்த வாரம் எலிமினேஷனில் முதலில் ஆர்.ஜே ஆனந்தியும் அதன் பிறகு சச்சனாவும் தொடர்ந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் நாமினேஷனில் ஒன்பது போட்டியாளர்கள் உள்ளனர். தற்போது நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
)
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்.ஜே ஆனந்தி வெளியே வந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், நான் வீட்டுக்குள்ள இருக்கும்போது போட்டியாளர்கள் எல்லோர் மேலையும் தனி ஒரு மரியாதை இருந்தது. இப்பவும் இருக்கு. ஆனா இப்போ சௌந்தர்யா மேல இருக்கிற மரியாதை அப்படியே போயிருச்சு. வெளியில வந்ததுக்கு அப்புறம் தான் அவருடைய நெகடிவ் பி.ஆர் வேலைகள் எல்லாம் தெரிந்தது. அந்த விஷயத்துல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்லை என்று ஆனந்தி பேசியுள்ளார்.
