இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய 2 போட்டியாளர்கள்.. இனி ஷோ எப்படி இருக்க போகுதோ..?

By Nanthini on மார்கழி 15, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Bigg Boss Tamil Season 8 (பிக் பாஸ் தமிழ் 8) : Trending Updates, Polls, Videos & Photos on Asianet Tamil News

   

 

   

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி போட்டியாளர் சத்யா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக காதல் கன்டென்ட் கொடுத்து வந்த நடிகை தர்ஷிகா வெளியேறியுள்ளார்.

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து நடையை கட்டிய தர்ஷிகா, சத்யா; இந்த வார எலிமினேஷன் | biggboss 8 tamil satya and tharshika evicted from house | HerZindagi Tamil

சத்யா பெரிதாக எந்த ஒரு கண்டென்ட்டும் கொடுத்து விளையாடாத நிலையில் தர்ஷிகா காதல் என்ற பெயரில் விளையாடி வந்தது தான் மக்கள் இவரை வெளியேற்ற காரணம் என கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அடுத்தடுத்த வாரங்களிலும் டபுள் எபிக்ஷன் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.