dhanush

இளையராஜா Biopic ஐ தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகரின் சுயசரிதையில் நடிக்கும் தனுஷ்… அவரை தவிர யாரும் செட் ஆக மாட்டாங்க…

By admin on மார்கழி 14, 2024

Spread the love

தனுஷ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகராவார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார். அதன் மூலம் சினிமாவில் அடிக்கும் வாய்ப்பு தனுசுக்கு கிடைத்தது.

   

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தனுஷ் மெல்ல மெல்ல தனது அடியை எடுத்து வைத்து பல வெற்றி படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக இருக்கிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக தனது கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் தனுஷ். சமீபத்தில் இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ராயன் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

   

அதனால் தனுஷ் அவர்கள் இயக்கத்திலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவர் நடிப்பில் குபேரா திரைப்படமும் அடுத்த ஆண்டு வருகிறது. இந்த மூன்று படங்களுமே அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜா அவர்களின் பயோபிக் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி பின்னர் ட்ராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த திரைப்படத்தின் Pre Production பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்கு அடுத்ததாக இந்த இளையராஜா பயோபிக் படத்தை முடித்த பிறகு தமிழ் சினிமாவின் பழம்பெரும் பிரபல காமெடி நடிகரும் தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின் என்று அழைக்கப்பட்டவருமான சந்திரபாபுவின் சுயசரிதையில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.