2024 ஆம் வருடம் முடிந்து 2025 தொடங்க இருக்கிறது. 2024 ஆம் வருடம் திருமண உறவில் இணைந்த முக்கிய பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அவருடைய விவகாரத்திற்கு பிறகு நடிகை சோபிதாவை காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் கடந்த டிசம்பர் நான்காம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 10 அன்று சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனனின் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி. இவர் நிக்கோலா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை மூன்றாம் தேதி அன்று தாய்லாந்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் பாரம்பரியமான இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இது நிக்கோலாய்க்கு இரண்டாவது திருமணம். ஆனால் வரலட்சுமிக்கு இது முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவருடைய நீண்ட நாள் காதலியான ஊத்துக்குளி ஜமீன் வாரிசுமான தாரணி காளிங்கராயர் கடந்த டிசம்பர் எட்டாம் தேதி அன்று குருவாயூர் கோயிலில் வைத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் நடந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இன் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. கடைசியில் ஒரு வழியாக தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டிலை காதலிப்பதாக அறிவித்தார் கீர்த்தி சுரேஷ். இதனை அடுத்து கோவாவில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
